அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை பெற ஆதார் கட்டாயமா? யாருக்கெல்லாம் கிடைக்கும்- முழு தகவல் இதோ – aadhaar mandatory for the ‘annan seer’ scheme; annual income eligibility limit set at rs 2.5 lakh

தவெக முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ‘அண்ணன் சீர்’ திட்டத்தில் பயன்பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள பெண்கள் தங்களது ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஆதார் அட்டை இல்லாதவர்கள், உடனே அதற்குப் பதிவுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், ஆதார் அட்டை வரும்வரை அதற்கு மாற்றான ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதார் இல்லாதவர்களுக்கு அரசு செய்ய வேண்டியது என்ன?

ஆதார் கட்டாயம் என்பதை அனைத்து பயனாளிகளுக்கும் தெரியப்படுத்த, Electronic மற்றும் Print Media மூலம் விளம்பரம் செய்ய வேண்டும்.

அருகில் உள்ள ஆதார் மையத்தில் உடனே பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும். உள்ளூரில் உள்ள மையங்களின் பட்டியலை அரசே வழங்க வேண்டும்.

தற்காலிக முகாம்:

உங்கள் ஊரில் ஆதார் மையம் இல்லை என்றால், அரசு நிறுவனமே (Implementing Agency) வசதியான இடத்தில் தற்காலிக ஆதார் பதிவு முகாம் நடத்தி, உங்கள் கோரிக்கையை பதிவு செய்ய வேண்டும்.

Source link