சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெரிய மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. கடந்த மூன்று சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாத நிலையில், அடுத்த சீசனில் இருந்து அதிரடி கம்பேக்கை கொடுக்க என்ன வழி என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஐபிஎல் 2028 சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன், பெரும்பாலான வீரர்களை விடுத்து, தரமான வீரர்களை வாங்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. அதற்குமுன், ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன், சில வீரர்களை விடுவித்து, இளம் வீரர்களை கொண்டுவர, தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான் முடிவு செய்துள்ளார்.
குறிப்பாக, சர்பரஸ் கானை விடுவித்துவிட்டு, தரமான இளம் வீரரை மிடில் வரிசையில் சேர்க்க ஜாகீர் கான் முடிவு செய்து, தற்போது உதய் சகரன் எனும் வீரரை, டிரையலுக்கு அழைத்துள்ளனர். இவர், மிடில் வரிசையில் நிலைத்து நின்று விளையாடும் பேட்டராக இருக்கிறார். 22 வயதாகும் உதய் சரண், இந்திய யு19 அணிக்காக விளையாடியிருக்கிறார். அதில், மொத்தம் 14 போட்டிகளில் 49.50 சராசரியில் 594 ரன்களை குவிக்க முடிந்தது. இதில், 2 சதம், 4 அரை சதங்கள் அடங்கும்.
டி20 கிரிக்கெட்டில் அபாரம்: இந்திய யு19 அணியில் டி20 பார்மெட்டில், உதய் சகரன் விளையாடவில்லை. இவர், பஞ்சாப் டி20 தொடரில், 6 போட்டிகளில் 195+ ஸ்ட்ரைக் ரேட்டில் 351 ரன்களை குவித்து அசத்தினார். இதில், மொத்தம் 5 அரை சதங்கள் அடங்கும். ஒரு போட்டியில், 43 பந்தில் 86 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார்.
வலது கை பேட்டராகவும், பார்ட் டைம் ஆப் ஸ்பின்னராகவும் உதய் சகரன் இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், மிடில் வரிசை பலமிக்கதாக இல்லை. டிவோல்ட் பிரேவிஸை நம்பிதான் மிடில் வரிசை இருக்கிறது. கார்த்திக் சர்மாவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. இந்நிலையில், மிடில் வரிசையை அபாரமாக கட்டமைக்கதான், உதய் சகரனை ஜாகீர் கான் தேர்வு செய்து ட்ரையலுக்கு அழைத்துள்ளார்.
பஞ்சாப் டி20 லீக் தொடரில், 6 போட்டிகளில் 5 அரை சதங்களை, 195+ ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருப்பதால், உதய் சகரனை வாங்க, அணிகள் கடும் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலமிக்க பேட்டிங் வரிசை: சிஎஸ்கேவில், பலம் மிக்க பேட்டிங் வரிசையை கட்டமைக்க முடிவு செய்து, அதற்கான வேலையை ஜாகீர் கான் துவங்கியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு நிகரமாக, சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசையை பலப்படுத்த முடிவு செய்துள்ளார்.
சென்னை போன்ற சுழலுக்கு சாதகமான பிட்சில், பவர் பிளேவில் அதிக ரன்களை குவித்தால் மட்டுமே, இறுதியில் பெரிய ஸ்கோரை எட்ட முடியும். இதனால், பவர் பிளேவில், சில போட்டிகளில் ஒரு பேட்டர் சொதப்பினால், அவரை உடனே பிளேயிங் 11-யை விட்டு தூக்கவும் ஜாகீர் கான் முடிவு செய்துள்ளாராம். இதனால், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஐபிஎல் 2027 சீசனில் தொடர்ச்சியாக அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால், கடந்த சீசனில், 123 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட், இம்முறை அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
