Bigg Boss Tamil 10: Raghav leg injury and fans prayer for speedy recovery

ராகவுக்கு மருத்துவ பரிசோதனை: தன் கெரியரை மேம்படுத்த உதவும் என்கிற முழு நம்பிக்கையில் பிக் பாஸ் 10 வீட்டிற்குள் சென்ற போட்டியாளர்களில் ஒருவரான ராகவ் ரங்கநாதனை நேற்று வெளியே கிளம்பச் சொல்லிவிட்டார்கள். மக்கள் ஓட்டு போடாததால் அவரை கிளம்பச் சொல்லவில்லை. ராகவின் உடல்நலத்தை கணக்கில் கொண்டு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அப்படியொரு முடிவு எடுத்தார்கள்.

ராகவை பரிசோதனை செய்த மருத்துவர்களோ அவருக்கு உடனடியாக காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறிவிட்டார்கள். அப்படி இருக்கும்போது அவர் பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் செய்தால் அதனால் கால் பிரச்சனை மேலும் அதிகரித்துவிடும். இந்நிலையில் தான் சக போட்டியாளர்களுக்கு குட்பை சொல்லிவிட்டு வெளியே வாங்க ராகவ் என்றார் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி.

ராகவ் குணம்: ராகவுக்கு லிகமென்ட் டேர்(ligament tear) இருப்பதால் தான் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருக்கிறார்கள். அதை கேட்டும் கூட நான் இந்த வீட்டில் இருக்கலாமா என மருத்துவர்களிடம் கேட்டிருக்கிறார் ராகவ். ஆனால் அது ரொம்ப ரிஸ்க் என்று மருத்துவர்கள் சொல்லவே கிளம்பிவிட்டார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் யார் மனதையும் புண்படுத்தாமல் இருந்தவர் ராகவ். தனக்கு யாரையும் ஹர்ட் பண்ண வராது என்று கூறிவிட்டு ஹவுஸ்மேட்ஸுக்காக தன் ஸ்டைலில் ஒரு பாட்டு பாடினார். அவர் பாடப் பாட தன்யாவுக்கு கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

அதன் பிறகு ராகவிடம் பேசிய பிக் பாஸோ, ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்து, மக்கள் வாக்களிக்காமல் நீங்கள் வெளியே செல்லவில்லை. பயணம் தான் முக்கியம் ராகவ், இலக்கு மாறிக் கொண்டே இருக்கும். உங்களின் இலக்கு தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்ளும். திரும்பி வரும்போது இரண்டு, மூன்று பாட்டு எடுத்துக் கொண்டு வாங்க ராகவ். அது உங்கள் தனித்திறமைகளில் ஒன்று. அதனால் பாட்டை விட்டுவிட வேண்டாம். உங்கள் உடலை சரி செய்து கொள்ள ஒத்துழைப்பு கொடுங்கள் என அறிவுரை செய்தார் பிக் பாஸ்.

தன்யா, லட்சுமி கண்ணீர்: திரும்பி வரும்போது என்றால் ராகவ் தன் சிகிச்சையை முடித்துக் கொண்டு ஒயில்டு கார்டு மூலம் வந்துவிடுவாரா என்றே நினைக்கத் தோன்றுகிறது. ராகவ் கிளம்புவதை அறிவித்ததும் தன்யாவும், லட்சுமி ப்ரியாவும் தான் பயங்கரமாக அழுதார்கள். நீ இல்லை என்றால் நான் இல்லை. எனக்கு யாருமே இல்லாதது மாதிரி இருக்குமே என ராகவை கட்டிப்பிடித்து ரொம்பவே அழுதார் தன்யா.

நான் இனிமேல் தனியாக இருப்பேனே. பயமாக இருக்கிறது அண்ணா என லட்சுமி ப்ரியாகதறி அழுதார். ராகவுக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை நடக்க பிரார்த்தனை செய்வதாக லட்சுமி ப்ரியாவின் ஆதரவாளர்கள் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்ததை தன் ஸ்டோரியாக வைத்திருக்கிறார் ராகவின் மனைவி ப்ரீத்தா.

2 பேருக்கு பாதிப்பு: சாந்தினி தமிழரசன் போதிய வாக்குகள் கிடைக்காத காரணத்தால் நேற்று வெளியேற்றப்பட்டார். நேற்று ஒரே நாளில் இரண்டு பேர் கிளம்பியதால் ஒயில்டு கார்டு என்ட்ரியாக புது முகம் யாராவது வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இந்த சீசனில் உடல்நிலை பாதிப்பால் பிக் பாஸ் வீட்டில் இருக்க ஆசைப்பட்டும் முடியாமல்மருத்துவர்களின் பரிந்துரையால் கிளம்பிய போட்டியாளர்கள் பாண்டியும், ராகவும். இருவரும் உடல்நலம் தேறி ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

Source link