பில்லி ஜீன் டென்னிஸ்: இந்தியா ஏமாற்றம்

புதுடில்லி: பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் வைஷ்ணவி, சஹாஜா தோல்வியடைந்தனர்.

டில்லியில், பெண்கள் அணிகளுக்கான பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ், ‘ஆசிய ஓசியானியா குரூப்-1’ சுற்று போட்டிகள் நடக்கின்றன. இந்தியா, நியூசிலாந்து, தென் கொரியா, இந்தோனேஷியா, மங்கோலியா, தாய்லாந்து என, 6 அணிகள் பங்கேற்கின்றன.

முதல் போட்டியில் தாய்லாந்திடம் தோல்வியடைந்த இந்தியா, 2வது போட்டியில் நியூசிலாந்தை வென்றது. மூன்றாவது போட்டியில் இந்தியா, இந்தோனேஷியா அணிகள் மோதின.

ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர், இந்தோனேஷியாவின் பிரிஸ்கா மோதினர். இதில் வைஷ்ணவி 7-6, 6-7, 3-6 என தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சஹாஜா 2-6, 1-6 என, இந்தோனேஷியாவின் ஜென்னிடம் வீழ்ந்தார்.

இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ருதுஜா, அன்கிதா ரெய்னா ஜோடி, இந்தோனேஷிய ஜோடியிடம் வீழ்ந்தது.

முடிவில் இந்திய அணி 0-3 என தோல்வியடைந்தது.

Source link