மக்களுக்கு 30 ரூபாய் விலையில் அரிசி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்திருக்கிறார்கள் தவெக அமைச்சர்கள். அப்படி வழங்கும் அரிசியில் பித்தலாட்டம் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தவெக ஆட்சி அமைந்தப்பிறகு மக்களின் அன்றாட தேவைகளுக்கான அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டுமளவுக்கு ராக்கெட் வேகத்தில் மிக கடுமையாக அதிகரித்துள்ளது. அரிசியின் விலை கடந்த 3 மாதங்களில் கிலோ ஒன்றுக்கு 30 முதல் 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஒரு கிலோ அரிசி 100 ரூபாயை கடந்து விடும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை செய் கிறார்கள். இதனால், ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினர் மிகவும் கவலை யடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில், தமிழகம் முழுதும் கூட்டுறவு துறை கட்டுப்பாட்டிலுள்ள, 201 கூட்டுறவு பண்டக சாலை அங்காடிகள், உணவு துறையின் கட்டுப்பாட்டிலுள்ல 49 அமுதம் அங்காடிகள் என 250 கடைகளில் சன்னரக அரிசியை ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்க, தமிழக அரசு முடிவு செய்தது. இந்த விற்பனையை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமதேனு அங்காடியில், உணவு துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜ் நேற்று காலை தொடங்கி வைத்தனர். ஒருவருக்கு 2 கிலோ வீதம் வழங்கப்பட்டது. தேவைக்கு ஏற்ப அதிகட்சமாக 5 கிலோ வரை வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், ரேசன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசியை பாலீஸ் செய்து அதனை சன்னரக அரிசியாக ஒரு கிலோவுக்கு 30 ருபாய்க்கு தவெக அரசு விநியோகம் செய்வதாகவும், இந்த அரிசி விர்பனையில் பித்தலாட்டம் நடப்பதாகவும் மக்களிடமிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த கலெக்டர் மிருனாளி, சன்னரக அரிசியை 30-ரூபாய்க்கு வழங்கினார். இதனை வாங்கிய பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ரேசனில் கொடுக்கப்படும் இலவச அரிசியை பாலீஸ் செய்து அதனை 30 ரூபாய்க்கு விற்பதாக குற்றம் சாட்டி, 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிசியை வாங்க மறுத்து கலெக்டர் மிருனாளியிடம் முறையிட்டனர். அத்துடன் , அந்த சன்னரக அரிசியை வாங்க மறுத்ததுடன், தவெக அரசு செய்யும் பித்தலாட்டத்தை கண்டித்து கோஷம் எழுப்பி குரல் கொடுத்தனர்.
அதேபோல, சேலம் மாவட்டத்தில் திட்டத்தை தொடங்கி வைத்த கலெக்டர் இளம் பகவத்திடம், “மனசாட்சியோடு செயல்படுங்கள். ரேசன் அரிசியை 30-ரூபாய்க்கு விற்கிறீர்களே… உங்களுக்கு உறுத்தவில்லையா? இலவச அரசியை 30-ரூபாய்க்கு விற்று ஏன் மோசடி செய்கிறீர்கள்? ” என்று சொல்லி அரிசியை வாங்காமல் கலெக்டரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு போராட்டம் பண்ணினார்கள். இப்படி தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில், இந்த பித்தலாட்டத்தை கண்டித்து முழக்கமிட்ட ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினர், 30- ரூபாய்க்கு வழங்கும் அரசியை வாங்காமல் திரும்பிச்சென்றனர்.
இந்த பித்தலாட்டம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வரும் நிலையில், இது குறித்து கூட்டுறவு மற்றும் உணவுத்துறை பணியாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, “அரிசி விலை அசூர வேகத்தில் உயர்ந்துள்ளதால் ஆட்சிக்கு எதிராக அதிர்ப்திகள் பொதுமக்களிடம் உருவாகியிருக்கிறது. இதனை சரி செய்ய, 30 ரூபாய்க்கு ஒரு கிலோ சன்னரக அரிசியை வழங்க முடிவு செய்து விற்பனையை தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், மக்களுக்கு விநியோகிக்கும் இந்த 30 ரூபாய் அரிசியை எங்கி ருந்து கொள்முதல் செய்தனர் என்பது யாருக்குமே தெரியாது. இப்படி சன்னரக அரிசியை கொள்முதல் செய்வதாக இருந்தால் முறையாக டெண்டர் விடப்பட்டிருக்க வேண்டும். அப்படி டெண்டர் விடப்பட்டதாகத் தெரிய வில்லை. அமைச்சர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் தான் இது வெளிச்சம் !
விண்ணை முட்டுமளவுக்கு அரிசி, எண்ணெய் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்கள் ரெக்கைக் கட்டிப்பறப்பதால், மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்திடமிருந்து 2 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கூடுதலாக வேண்டும் என தவெக அரசு சார்பில் கேட்கப்பட்டது. ஆனால், உங்களிடம் இன்னும் 3 மாதத் திற்குத் தேவையான அரசி இருக்கிறது. அதனால் தருவதற்கு இயலாது என சொல்லி மறுத்து விட்டது இந்திய உணவுக் கழகம். அதாவது, மாதத்திற்கு ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரிசியை ஓப்பன் மார்கெட் சேல் ஸ்கீம் திட்டத்தின் படி கிலோ ஒன்றுக்கு 22.50 காசுகள் வீதம் தமிழக அரசுக்கு கொடுத்து வருகிறது இந்திய உணவுக்கழகம். இந்த திட்டத்தி ல் தான், கூடுதலாக 2 லட்சம் மெட்ரிக் டன் அரசியை தவெக அரசு கேட்ட போது இந்திய உணவுக்கழகம் தர மறுத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில், மக்களுக்கு விநியோகிக்கப்படும் 30-ரூபாய்க் கான அரிசியை எங்கிருந்து கொள்முதல் செய்தனர் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு எங்கள் துறையின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளிடம் வெளிப்படைத்தன்மை இல்லை.
தஞ்சை மாவட்டத்திலுள்ள விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை வாங்கி, அதனை தமிழகத்திலுள்ள அரசுக்கு சொந்தமான மாடர்ன் ரைஸ் மில்லில் கொடுத்து, அரவை செய்து, பாலீஸ் பண்ணி அதனை மக்களிடம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். இது,தமிழக ரேசன் கடை களில் வழங்கப்படும் இலவச அரிசியை விட தரம் குறைவாக இருக்கிறது. அதனால் தான் மக்கள் 30 ரூபாய் அரிசியை வாங்காமல் திருப்பி கொடுத்து விட்டு போகிறார்கள். இதுமட்டுமல்லாமல், ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் இலவச அரிசியையும், அரவை மில்லில் கொடுத்து பாலீஸ் செய்து அதனை 30 ரூபாய் க்கு மக்களிடம் விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிக்கும் ஊழலும் நடந்து கொண்டிருப்பதாக மக்களிடமிருந்து நிறைய புகார்கள் வருகின்றன” என்கிறார்கள் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை வட்டாரங்கள்.
அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்துவதாக சொல்லி, மக்களுக்கு வழங்கப்படும் 30 ரூபாய் சன்னரக அரிசியை எங்கிருந்து கொள்முதல் செய்கின்றனர்? முறையாக டெண்டர் விடப்பட்டதா? அப்படி விடப்பட்டி ருந்தால் எத்தனை ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது? அதன் விலை என்ன? ரேசன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசியை அரைத்து பாலீஸ் செய்து அதனை புதிய சன்ன ரக அரிசியாக மக்களுக்கு விநியோக்கிப் படுவதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன ? இந்த கேள்விகளுக்கெல் லாம் பதிலளித்து, அதன் உண்மைத்தன்மையை வெளிப்படையாக மக்களு க்கு தெளிவுப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் அமைச்சர்களுக்கு இருக்கிறது. அமைச்சர்கள் தெளிவுப்படுத்துவார்களா? என்பதே மக்களின் எதிர்பார்ப்பு !
