தற்பொழுது துலாம் ராசியில் சஞ்சாரம் செய்து வரக்கூடிய புதன் பகவான், வரும் அக்டோபர் 24-ஆம் தேதி, வக்ர நிலை எனும் பின்னோக்கி நகர தொடங்க உள்ளார். தீபாவளி பண்டிகை வரை இந்த நிலையில் இருக்கக்கூடிய புதன் சில ராசிகளின் வாழ்க்கையில் சாதகமற்ற பலன்களை தரக்கூடியதாக அமைய உள்ளார். இவருடைய தாக்கம் காரணமாக எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
ஒருவருக்கு திறமை, சிந்தனையை, நுண்ணறிவு உள்ளிட்ட விஷயங்களை தரக்கூடிய புதன் பகவான் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை வக்கிர பெயர்ச்சியை மேற்கொள்ள உள்ளார். இதன் காரணமாக இவருடைய இயல்பாக தரக்கூடிய பலன்கள் குறைய தொடங்கும். புதனின் அசுப தாக்கத்தால் சில ராசிகளின் வாழ்க்கையில் வியாபாரம், வேலைவாய்ப்பு, உறவுகளில் பிரச்சனைகள் என சாதகமற்ற சூழல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
மேஷ ராசி நண்பர்களுக்கு புதனின் இந்த பின்னோக்கிய நகர்வு உங்களுடைய வேலை, தொழில் தொடர்பான கூட்டணி விஷயங்களில் சில கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தலாம். அதனால் உங்களுடைய பேச்சில் கவனமாக இருக்கவும். உங்களுடைய பழைய உறவு பிரச்சனைகள் மீண்டும் தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. குடும்பம் மற்றும் பணியிடத்தில் உள்ள எந்த வகையான பிரச்சினைகளையும் நிதானமான பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காண்பது நல்லது. இந்த காலத்தில் சண்டை சச்சரவுகளை தயாரிக்கவும்.
மிதுன ராசி
மிதுன ராசி நண்பர்களுக்கு உங்கள் ராசி அதிபதி புதனின் வக்ர நிலை காரணமாக வாழ்க்கையில் பெரிய அளவில் சில பாதிப்புகளை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நீங்கள் செய்த வியாபாரம் அல்லது வேலையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் கூடுதல் கவனத்துடனும், கடின உழைப்பும் தேவைப்படும்
உங்களுடைய எல்லோருக்கும் மாற்றம் செய்ய வேண்டியதாக இருந்தால், அதற்கு அவசரப்பட்டு முடிவுகளை எடுப்பது, செயல்களில் மாற்றம் செய்வதை தவிர்க்கவும். ஒரு நேரத்தில் ஒரு வேலையில் கவனம் செலுத்தி முடிக்க முயற்சி செய்யவும்.
பணியிடத்தில் உங்கள் வேலை தொடர்பாக ஊழியர்களிடம் இருந்து தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மாணவர்கள் படிப்பு மற்றும் தேர்வு விஷயங்களில் திட்டமிட்ட நேரத்தை பயன்படுத்தி படிக்க முயற்சி செய்யவும். காதல் உறவில் உள்ள கருத்து வேறுபாடுகள் மீண்டும் சச்சரவு ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு.
கன்னி ராசி
கன்னி ராசி அதிபதி புதன் பகவானின் வக்ர நிலை காரணமாக பண பரிவர்த்தனை தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த காலத்தில் கடன் கொடுப்பது அல்லது முதலீடு சந்தையில் சரியான தகவல்களை பெற்று செயல்பட வேண்டியது அவசியம்.
சொத்துக்கள் வாங்குவது அல்லது முக்கிய ஒப்பந்தங்கள் தொடர்பாக ஆவணங்களை கவனமாக ஆய்வு செய்யவும். அவசரமாக எந்த ஒரு முடிவுகள் எடுக்காமல் இருப்பது நன்மை தரும்.
வேலை செய்யக்கூடியவர்கள், உங்கள் திட்டங்களை மறு பரிசீலனை செய்ய, வேலையை மாற்றும் முயற்சி விஷயங்களை நிதானத்தை கடைபிடிக்கவும்.
துலாம் ராசி
துலாம் ராசி அன்பர்களுக்கு புதனின் வக்ர நிலை உங்கள் ராசியில் நடப்பதால், எந்த ஒரு செயல்களிலும் யோசனை இல்லாமல் செயல்பட வேண்டாம். மேலும் உங்களுடைய திட்டங்களை மதிப்பீடு அரசியலமை செய்ய வேண்டியது அவசியம். உங்களின் வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக புதிய முடிவுகள் எடுப்பதற்கு முன் கவனமாக சிந்திக்க வேண்டியது அவசியம். உங்கள் உறவுகளில் ஏற்படக்கூடிய தவறான புரிதல்களை நீக்க நிதானமான பேச்சு நன்மை தரும்.
எந்த ஒரு விஷயத்திற்கு உங்களுடைய பதில் கொடுப்பதற்கு முன் அல்லது ஆலோசனை தெரிவிப்பதற்கு முன் யோசனை செய்து செயல்படவும். வேலை, வியாபாரம் தொடர்பாக சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எந்தவித சச்சரவுகளில் ஈடுபடாமல் தைரியமாக சூழலை எதிர்கொள்ள முயற்சி செய்யவும்.
மகர ராசி
மகர ராசி சேர்ந்தவர்களுக்கு உங்களுடைய ராசிக்கு கர்ம ஸ்தானத்தில் புதன் வக்ர நிலையில் சஞ்சரிக்கும் நீங்கள் எந்த துறையில் பணியாற்றினாலும் அதில் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் செயல்படவும். உங்களுடைய திட்டங்கள் அல்லது வேலை தொடர்பாக தாமதங்கள் சந்திக்க நேரிடும்.
முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு முன், மூத்தவர்கள், அனுபவசாலிகள் ஆலோசனை பெற்ற செயல்படுவது நன்மை தரும். உங்களுடைய பழைய திட்டங்கள், முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியது இருக்கும்.
மின ராசி
மீன ராசி நண்பர்களுக்கு புதனின் வக்ர கதியால் (பின்னோக்கிய இயக்கம்), பண பரிவுதனை செய்வது மற்றும் முதலீடு விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். நிதி சார்ந்த விஷயங்களில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த காலத்தில் ஆன்மீக பரிகாரங்கள், சுப முகூர்த்தம் தொடர்பாக முழுமையாக தகவல் இல்லாமல் செயல்படுவதை தடுக்கவும்.
உங்களுடைய உறவுகளை கருத்து வேறுபாடுகளை தவிர்க்க நிதானமான பேச்சு மற்றும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டியது அவசியம். கவனக்குறைவு தவிர்த்து சுறுசுறுப்புடன் செயல்பட முயற்சி செய்யவும்.
