மதுரா:உத்தர பிரதேசத்தில் பாயும் யமுனை ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர். உ.பி.,யின் மதுரா

மதுரா:உத்தர பிரதேசத்தில் பாயும் யமுனை ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

உ.பி.,யின் மதுரா மாவட்டத்தில் பாயும் யமுனை ஆற்றில் பஞ்சாபை சேர்ந்த 30 பயணியருடன் படகு ஒன்று நேற்று புறப்பட்டது. விருந்தாவன் கோட்வாலி பகுதியில் சென்றபோது திடீரென படகு கவிழ்ந்தது. பயணியர் அனைவரும் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர்.

தகவல் அறிந்து வந்த மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் உள்ளூர் நீச்சல் வீரர்கள் 50 பேர் உதவியுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இதில் 16 பயணியர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்; ஆறு பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் பலர் மாயமானதை அடுத்து அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக’கலெக்டர் சந்திர பிரகாஷ் சிங் தெரிவித்தார்.

Source link