காரைக்குடி: அரசியல் அனுபவம் கிடையாது. இன்றைக்கு காரைக்குடிக்கு வந்தார். பேசாமலேயே போவது அரசியலா? என விஜய்க்கு

காரைக்குடி: அரசியல் அனுபவம் கிடையாது. இன்றைக்கு காரைக்குடிக்கு வந்தார். பேசாமலேயே போவது அரசியலா? என விஜய்க்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

காரைக்குடியில் நிருபர்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது: அரசியல் அனுபவம் கிடையாது. இன்றைக்கு காரைக்குடிக்கு வந்தார். பேசாமலேயே போய்விட்டார். அது எப்படி? அரசியல் என்றால் பேச்சுதானே? சர்ச்சை தானே?

விவாதம் தானே? என் கருத்தை நான் சொல்கிற மாதிரி அவர் கருத்தை சொன்னால்தானே விவாதம் செய்ய முடியும். நான் பேசாமல் இருப்பேன் என்று இருக்கிறார். பத்திரிக்கையாளர்களை சந்திப்பது இல்லை. மக்களை சந்தித்து பேசுவது இல்லை.

நான் நிதி அமைச்சராக பதவி வைத்துள்ளேன். ஊர் ஊராக பேசுவதற்கு தயாராக இருந்தேன். அவர் விவாதத்திற்கும் தயாராக இல்லை. அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு வாழ்த்துக்கள். ஆனால் ஆட்சி செய்ய வேண்டும். ஆட்சி செய்வது வேற, சினிமா ரசிகர்கள் என்பது வேறு.

ஆட்சி செய்வது என்பது எந்த திட்டத்தை செயல்படுத்தினால் மக்களுக்கு பயம் கிடைக்கும். எந்த வகையில் பணத்தை செலவழித்தால், மக்களுக்கு பலன் கிடைக்கும் என்பது ஆகும். இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

Source link