அனிருத் பற்றி கணிப்பு: 2013ம் ஆண்டு ஆண்டு அக்டபோர் மாதம் தந்தி டிவிக்காக அப்சரா ரெட்டி தொகுத்து வழங்கிய நட்புடன் அப்சரா நிகழ்ச்சி வீடியோ கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலோ வைரலாகியிருக்கிறது. அதற்கு காரணம் அந்த நிகழ்ச்சிக்கு வந்த இசையமைப்பாளர் அனிருத்துக்கு காதல் திருமணம் நடக்கும். அவரின் வருங்கால மனைவி சினிமா துறையில் இருக்க மாட்டார். ஆனால் telecommunication வேலை செய்வார்.
அந்த பெண் சென்னையில் வசிப்பவர். அனிருத் வசிக்கும் இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் தான் இருப்பார்.தன் அப்பா ஓகே சொல்லும் பெண்ணை தான் அனிருத் திருமணம் செய்து கொள்வார் என்று டாரட் கார்டுகளை பார்த்து சொன்னார் ஜோதிடர் ஜெயஸ்ரீ. அவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அனைத்துமே காவ்யா மாறனுக்கு அப்படியே பொருத்தமாக உள்ளது.
சென்னையை சேர்ந்தவர் காவ்யா. ஜெயஸ்ரீ சொன்னது போன்று சினிமா துறையை சார்ந்தவர் கிடையாது. அனிருத் அப்பா ரவி ராகவேந்திரா ஓகே சொல்லிவிட்டார். எப்படிங்க ஜெயஸ்ரீ எல்லாமே சரியாக சொல்லியிருக்கிறீர்கள் என வியக்காதவர்களே இல்லை.
ஜெயஸ்ரீ விளக்கம்: இந்நிலையில் அது குறித்து இணையதள பேட்டி ஒன்றில் ஜெயஸ்ரீ கூறியதாவது, நட்புடன் அப்சரா தான் நான் டிவியில் கலந்து கொண்ட முதல் ஷோ ஆகும். அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர் அனிருத் என்பதை தாண்டி அவர் யார், என்ன செய்கிறார் என்று எனக்கு எதுவுமே தெரியாது. என்ன கேள்வி கேட்பார்கள் என தெரியாமல் சென்றேன். சும்மா தைரியமாக போ என என் டீச்சர் சொன்னார். குருவின் அனுகிரகம், சரஸ்வதி கடாட்சம் இருந்தால் போதும் என்பது அப்பொழுது தான் புரிந்தது.
டாரட் கார்டை படிக்கும்போது நல்ல flow வந்தது. flow செட்டாகிவிட்டது என்றால் கார்டு நம்மிடம் பேசும். என் கணிப்பு வீடியோ வைரலானது வியப்பாக உள்ளது. மேடம், நீங்கள் 13 வருடத்திற்கு முன்பு சொன்ன விஷயம் அடங்கிய வீடியோ வைரலாகிவிட்டது என என்னிடம் ஒருவர் கூறினார் என்றார்.
காவ்யா, அனிருத் காதல்: சன் குழும தலைவர் மகள் காவ்யாவை அனிருத் காதலிக்கிறாராம். இருவரும் வெளிநாட்டில் சந்தித்த வீடியோ வந்திருக்கிறது என்றெல்லாம் மக்கள் பேசினார்கள். ஆனால் காதல் இருந்தபோதிலும் அது குறித்த சமூக வலைதள பேச்சுகளை பார்த்துவிட்டு ஆம், நாங்கள் காதலர்கள் தான் என அனிருத்தோ, காவ்யாவோ தெரிவிக்கவில்லை.
சொல்லப் போனால் கடந்த ஆண்டு திருமண குறித்து பேச்சு கிளம்பியபோது அதை பார்த்துவிட்டு, எனக்கா கல்யாணமா, சில் கைஸ் என்று ட்வீட் செய்தார் அனிருத். இந்த மனுஷன் சொல்வதை பார்த்தால் கல்யாணம் எதுவும் இல்லையோ என நினைக்கத் தோன்றியது. தற்போது அந்த ட்வீட்டும் கூட வைரலாகியிருக்கிறது.
கிரீஸில் அடுத்த மாதம் 11ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. அதன் பிறகு 21ம் தேதி சென்னையில் நடக்கும் திருமண வரவேற்பில் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் என திரும்பும் பக்கம் எல்லாம் தெரிந்த முகங்களாக இருக்கப் போகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
தங்கள் வீட்டு விசேஷத்திற்கு வருபவர்களுக்கு சிறப்பு அன்பளிப்பு அளிக்க கலாநிதி மாறன் முடிவு செய்திருக்கிறாராம். இதற்கிடையே அனிருத் மனைவியாகும் காவ்யா மாறனின் சொத்துமதிப்பு ரூ. 409 கோடி என்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
Source link
