MI, SRH Trading – இந்த 2 வீரர்களை வாங்கிட்டு, பும்ராவ கொடுங்க: MI அணிக்கு SRH தரமான ஆஃபர் – sunrisers hyderabad interest to get jasprit bumrah in ipl 2027 trading

ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலம், டிசம்பர் நடுபகுதியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதற்குள், டிரேடிங் பணிகளை முடிக்க அனைத்து அணிகளும் தீவிரம் காட்டி வருகிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், அணியை பலமிக்கதாக கட்டமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஜஸ்பரீத் பும்ராவை வாங்க, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தீவிரம் காட்இ வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, சமீபத்தில் டெல்லி கேபிடல்ஸிடம் இருந்து டி நடராஜனை வாங்கியிருக்கும் சன் ரைசர்ஸ் அணி, பும்ராவையும் வாங்கி அணியை பலமிக்கதாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக, இரண்டு முக்கிய வீரர்களை விட்டுக்கொடுக்கவும் சன் ரைசர்ஸ் முன் வந்துள்ளதாம். இஷான் கிஷன், டிராவிஸ் ஹெட் இருவரையும் விட்டுக்கொடுக்க முன் வந்திருக்கிறார்கள்.

என்ன காரணம்? மும்பை இந்தியன்ஸ் அணியிடம், கேப்டன் பதவியை ஜஸ்பரீத் பும்ரா எதிர்பார்க்கிறார். ஆனால், திலக் வர்மாவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளார். இதனால், பும்ரா அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம், பும்ராவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க முன் வந்துள்ளது. மேலும், மும்பை இந்தியன்ஸுக்கு இஷான் கிஷன், டிராவிஸ் ஹெட் ஆகியோரை கொடுக்க முன் வந்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, ரோஹித் சர்மாவுக்கு அடுத்து தரமான ஓபனர் தேவைப்படுகிறார். இதனால், இஷான் கிஷனையும், டிராவிஸ் ஹெட்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இருக்கிறது. அதேநேரத்தில், நீண்ட காலமாக அணியில் இருக்கும் பும்ராவை விடுவிப்பதும் மும்பை இந்தியன்ஸுக்கு சிக்கல்தான். பும்ரா இருப்பதால்தான், மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சு படை பலமிக்கதாக இருக்கிறது.

ஒருவேளை, பும்ராவை டிரேடிங்கில் அனுப்பிவிட்டால், பும்ராவின் நிலைமை மிகவும் பறிதாபமானதாக மாறிவிடும். இதுகுறித்து, விரைவில் இறுதி முடிவை எடுத்து, சன் ரைசர்ஸ் அணியிடம், மும்பை இந்தியன்ஸ் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2026 சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணி பௌலர் பும்ரா 13 போட்டிகளில் 4 விக்கெட்களைதான் எடுத்தார். எகனாமி 8.10 என்ற நல்ல நிலையில்தான் இருந்தது. மற்ற மும்பை இந்தியன்ஸ் பௌலர்கள் சொதப்பலாக பந்துவீசியதால், பும்ராவுக்கு எதிராக நிதானமாக ஆடிவிட்டு, மற்ற பௌலர்களை டார்கெட் செய்து ரன்களை அடித்தனர்.

அதாவது, பும்ரா 8.10 எகனாமியில் ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில், மற்ற மும்பை இந்தியன்ஸ் பௌலர்கள் அனைவரும் சேர்ந்து, 10.88 எகனாமியில் ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பினார்கள். இதனால், பும்ரா இல்லை என்றால், மற்ற பௌலர்களை எளிதாக டீல் செய்துவிட முடியும் என்பது தெரிய வருகிறது.

ஹைதராபாத் பிட்சில், பௌலர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால்தான், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் டி நடராஜனை டிரேடிங்கில் வாங்கியுள்ளனர். அதேநேரத்தில், பும்ராவும் வந்துவிட்டால், பவர் பிளேவிலும் ரன்களை கட்டுப்படுத்த முடியும். இதனால்தான், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம், பும்ராவை வாங்க முரட்டு ஆஃபரை கொடுத்துள்ளது. இஷான் கிஷன், டிராவிஸ் ஹெட்டிற்காக, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், பும்ராவை விட்டுக்கொடுக்குமா இல்லையை என்பது இன்னமும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link