விஜய் சார், நீங்க நினைச்சா 1 செகண்ட்ல பண்ண முடியும்: முதல்வருக்கு லெஜெண்ட் சரவணன் வைத்த கோரிக்கை? – vijay sir you can do it in just one second legend saravanan makes a request for auto drivers

அகில இந்திய லெஜெண்ட் சரவணன் ரசிகர் மன்றம் தரப்பில் ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை பாடியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்குச் சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சரவணா ஸ்டோர்ஸ் குழுமத் தலைவரான லெஜெண்ட் சரவணா சமீப காலமாக சினிமாவில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் ஆயுத பூஜைக்கு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதைப்போலவே இந்த ஆண்டும் தனது ரசிகர் மன்றம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்ட நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணா, 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தனது அகில இந்திய ரசிகர் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், ஆட்டோ ஓட்டுநர்களுடன் சேர்ந்துஆயுத பூஜையையும் அவர் கொண்டாடினார்.

முதல்வர் விஜய்க்கு லெஜெண்ட் சரவணா கோரிக்கை

இதைத் தொடர்ந்து மேடையில் பேசிய அவர், “ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் கோரிக்கைகளை அரசுக்குப் பலமுறை வலியுறுத்தி இருக்கின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நேரத்தில் நமது தமிழக முதல்வர் அன்புச் சகோதரர் விஜய் அவர்களுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை விடுக்கிறேன். ஆட்டோ ஓட்டுநர்களின் அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.

நிறைய பெண்களும் தற்போது ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் இருக்கின்றன. நீங்கள் நினைத்தால் ஒரு செகண்ட்தான். அவர்களின் வாழ்வை மேம்படுத்த முடியும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தச் சூழலில், ஆட்டோ ஓட்டும் தொழிலைச் சார்ந்து இருக்கக்கூடிய மக்களுக்குப் போதிய உதவிகளைச் செய்து தர வேண்டும்” என முதல்வர் விஜய்க்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

Source link