தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்புக்கு திமுகதான் காரணம்; அமைச்சர் நிர்மல் குமார்

சென்னையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது: மின் துறையில் வட கிழக்கு பருவ மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; மின் வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது; டெண்டர் மூலமாகவே ஒப்பந்த பணி நியமனங்கள் நடைபெறும்.

சென்னையில் 600 முதல் 1,000 மின் மாற்றிகளை புதிதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மீட்டர் ரீடிங் எடுப்பதற்கு குறைந்த பணியாளர்கள் உள்ளதால் கூடுதலாக 5,000 பணியாளர்கள் நியமிக்க உள்ளோம். ஸ்மார்ட் மீட்டர் திட்டம் இரண்டரை மாதத்திற்கு ஒத்திவைக்கப் பட்டு உள்ளது.

தமிழகத்தில் மெத்தபெட்டமைன் சப்ளை செய்தது திமுக ஆட்சியில் அவர்கள் தான். போதைப் பொருள் புழக்கத்தில் தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்றது திமுக தான் காரணம். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தனித்துறையை அமைத்து நடவடிக்கை எடுக்கும் பணியில் முதல்வர் விஜய் ஈடுபட்டுள்ளார்.

யாராக இருந்தாலும் 100 சதவீதம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப்பொருள் புழக்கத்தை முழு அளவில் கன்ட்ரோல் செய்வதுதான் முதல்வரின் கவனம் இருக்கிறது. இவ்வாறு நிர்மல் குமார் கூறினார்.

Source link