‘வென்று வா மகளே’… காமன்வெல்த் போட்டி இந்திய அணியில் இடம் பிடித்த கண்ணகி நகர் கார்த்திகா

சென்னையின் எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது அபாரமான ஆட்டத்தின் காரணமாக ரசிகர்களால் ‘கண்ணகி நகர் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் கார்த்திகா. இவர் சமீப காலங்களில் அசாத்தியமான ஃபார்மிலும் இருந்து வருகிறார். குறிப்பாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் துணைத் கேப்டனாக செயல்பட்டு அணி தங்கப்பதக்கம் வெல்ல முக்கியப் பங்காற்றி இருந்தார். 

அத்தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் அணி ஈரான் அணியை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது. இதுதவிர, இந்த ஆண்டு நடைபெற்ற சீனியர் தேசிய மகளிர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாடு அணிக்காக விளையாடிய கார்த்திகா ஒட்டுமொத்தமாக 81 ரெய்டு புள்ளிகளைக் குவித்து, இந்தியாவின் ‘நம்பர் 1 ரெய்டர்’ ஆகவும் உள்ளார்.

இவரது அசாத்திய தனிநபர் ஆட்டத்திறனால் மட்டுமே, தமிழ்நாடு மகளிர் கபடி அணி சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சீனியர் தேசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணியில் கார்த்திகா நிச்சயம் இடம்பெறுவார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய மகளிர் கபடி அணியில் கார்த்திகாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக, தற்போதைய இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள பல முன்னணி வீராங்கனைகளை விடவும் கார்த்திகா அதிக புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையிலும், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. சர்வதேச அளவிலும், உள்நாட்டுப் போட்டிகளிலும் பல சாதனைகளைப் படைத்த ஒரு வீராங்கனைக்கு, ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணியில் இடம் மறுக்கப்பட்டது பெரும் பேசுபொருளாக மாறியது. ஆனாலும், இரண்டாவது முறையாக ஆசிய கோப்பை பயிற்சி முகாம் தேர்வு செய்யப்பட்டார். 

இந்திய அணிக்கு தேர்வு 

கார்த்திகா 2025 ஆம் ஆண்டு 4 வது பெடரேசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி முதல் முறையாக உலக கோப்பை இந்திய அணி பயிற்சி முகாம் தேர்வானர். இந்நிலையில், இந்திய சீனியர் அணி பயிற்சி முகாமுக்கு மூன்றாவது முறையாக தேர்வாகினார் கண்ணகி நகர் கார்த்திகா. 2026 முதலாவது காமன்வெல்த் இந்திய அணி பயிற்சி முகாமுக்கு மூன்றாவது முறையாக தேர்வு செய்யபட்டார். 

இந்த நிலையில், காமன்வெல்த் கபடி போட்டிக்கான இந்திய அணிக்குத் தேர்வாகியிருக்கிறார் கண்ணகி நகர் கார்த்திகா. அவருக்கு கபடி ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.   

Source link