அக்டோபர் 31ஆம் தேதி குரு பகவான் கடக ராசி சிம்ம ராசியில் அடைகிறார்.2027 ஜனவரி 25ஆம் தேதி வரை அங்கு சஞ்சாரம் செய்ய உள்ளார். இந்த காலத்தில் குருவின் பார்வை பலன்கள் எப்படி இருக்கும்?, அவருடைய அற்புத பார்வை எந்தெந்த ராசிகளின் மீது விழும், அதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த ஆண்டு குரு பகவானின் நகர்வு பல்வேறு விதத்தில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளன. கடந்த ஜூன் 2ம் தேதி கடக ராசியில் நுழைந்த குரு பகவான், இந்நிலையில் தற்போது அதிகார பெயர்ச்சியை மேற்கொண்டு வரக்கூடிய குரு பகவான், வரும் அக்டோபர் 31ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசியில் நுழையுள்ளார். 2026 டிசம்பர் 13ம் தேதி அதிசார நிலையில் இருந்து பின்னோக்கி நகர தொடங்க உள்ளார். குருவின் இந்த மாற்றம் மற்றும் அவருடைய பார்வை எந்தெந்த ராசிகளுக்கு செல்வ செழிப்பையும், தொழில் முன்னேற்றத்தை, புதிய வாய்ப்புகளை கொண்டு வரும் என தெரிந்து கொள்வோம்.
குரு அருளும் பொதுவான பலன்கள்
ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவானின் பெயர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. குருவின் பெயர்ச்சி சிலரின் வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கும். சிம்ம ராசியில் குருவின் சஞ்சார நிலை சிலரின் தொழில், வியாபாரம், வேலை மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
ஜோதிட ரீதியாக குருவின் பார்வையானது 5, 7, 9 ஆகிய சிறப்பு பார்வை பலனை தரக்கூடியது. அந்த விதத்தில் மேஷ ராசிக்கும் ஐந்தாம் இடத்திலும், கும்ப ராசிக்கு ஏழாம் வீட்டிலும், தனுசு ராசிக்கு 9 ஆம் வீட்டில் குரு சஞ்சாரம் செய்ய உள்ளார். அதுமட்டுமல்லாமல் சிம்ம ராசியில் குரு சஞ்சரிக்க கூடிய காரணத்தால் அவரின் அருள் பார்வை எப்படி பட்ட பலனை தரும் என பார்ப்போம்.
மேஷ ராசி
மேஷ ராசி அன்பர்களுக்கு உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் குருவின் சஞ்சாரம் நடப்பது நன்மைகளை தரக்கூடிய காலமாக இருக்கும். உங்கள் வேலை, தொழில் என மெதுவாக இருந்தாலும் நீங்கள் செயல்படுத்தக்கூடிய புதிய திட்டங்கள் முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும்.
பூர்வீக சொத்துக்கள் கிடைப்பது, குடும்பத்தில் திருமணம், குழந்தை பேறு போன்ற சுப விஷயங்கள் நடக்கும். உங்களுடைய வருமானம் அதிகரிப்பதற்கான புதிய வழிகளை கருத்தில் கொண்டு செயல்பட்டால் முன்னேற்றம் அதற்கேற்ற போல் அதிகரிக்கும். குடும்பத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் கலந்த ஆலோசித்து எடுக்கக்கூடிய முடிவுகள் எதிர்காலத்தில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக அமையும்.
சிம்ம ராசி
அக்டோபர் 31ஆம் தேதி குருவின் அதிசார பெயர்ச்சியால் சிம்ம ராசியில் நுழைய உள்ளதால், சிம்ம ராசிக்கு குருவின் சஞ்சாரம் பல விதத்தில் உங்களுக்கு தன்னம்பிக்கை, முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். வேலை தொடர்ப உங்களுக்கு புதிய பொறுப்புகள் நல்லது பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் அதிபர்கள் ஒப்பந்தங்கள், திட்டங்கள் மூலம் முன்னேற்றம் பெறுவார்கள். உங்களுடைய ராசியில் குரு இருப்பதால் மனதில் தைரியம் அதிகரிக்கும். உங்கள் செயல்பாடு தெளிவு நிறைந்திருக்கும். மேலும் விவேகமாக நிதி முடிவுகளை எடுக்கவும், செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்கவும் முடியும்.
தனுசு ராசி
தனுசு ராசி அன்பர்களுக்கு குருவின் மிக அற்புதமான பலன் தரக்கூடிய ஸ்தானமானது அமைய உள்ளது. இந்த காலத்தில் குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். உங்களுடைய குடும்ப முன்னேற்றத்திற்காக இருக்கக்கூடிய முயற்சிகள், முதலீடுகள் எதிர்கால்கள் நல்ல பலனைத் தரும். மேலும் கடினமான நேரத்திலும் உங்களுடைய தந்தை அல்லது அனுபவசாலிகளின் நல்ல ஆலோசனைகளை பெற்றிடுவீர்கள்.
இந்த காலத்தில் குரு வழிபாடு செய்து எடுக்கக்கூடிய முடிவுகள், முயற்சிகள் எதிர்காலத்தில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல பலனை தரும்.
கும்ப ராசி
கும்ப ராசி அன்பர்களுக்கு சப்தம ஸ்தானத்தில் குருவின் சஞ்சாரம் உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சியாக, உங்கள் துணையுடன் இணக்கமான சூழ்நிலையும் ஏற்படுத்தும். மேலும் ஏழரை சனி நடக்கக்கூடிய காலமாக இருந்தாலும், அதிலிருந்து நிவாரணம் விதத்தில் குருவின் அமைப்பு உங்களுக்கு உதவும்.
தொழில் செய்யக்கூடியவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் அல்லது வணிகம் தொடர்பான கூட்டணிகள் உங்களுக்கு கிடைக்கப் பெறுவீர்கள். முன்னேற்றத்தை தரக்கூடிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நீங்கள் செய்யக்கூடிய வேலையில் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு சூழலும் இருக்கும். இந்த காலத்திலேயே எந்த ஒரு பெரிய முதலீடோ அல்லது நிதி சார்ந்த ஒப்பந்தங்கள் செய்வதற்கு முன் தேவையான அனைத்து தகவல்களையும் சரி பார்ப்பது மிக அவசியம்.
