தனியார் கட்டுமான நிறுவனமான ‘பாஷ்யம்’ குழுமத்திற்கு அரசு சார்பில் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், அதுபோன்ற எந்தவொரு ஒப்புதலும் வழங்கப்படவில்லை என்றும் அரசு தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், இந்த விவகாரம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். பாஷ்யம் நிறுவனம் தரப்பிலிருந்து பல்வேறு திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளனவா என்பது குறித்து செயலாளரிடம் கேட்டறிந்தபோது, விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை நிலைகளில் மட்டுமே உள்ளதே தவிர, அரசு சார்பில் இதுவரை எந்தவொரு அப்ரூவலும் வழங்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
Minister @CTR_Nirmalkumar exposes Savukku Shankar.
“It was Savukku who claimed, “Permission has been granted to the Baashyaam company.” But did he ever release a single valid approval document to back it? Not at all!
Spreading baseless stories about “approvals granted” was all… pic.twitter.com/qIB2JvTcnj
— George (@georgeviews) October 19, 2026
மேலும், 100 சதவீதம் இதுவரை அந்த நிறுவனத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி வெறும் குற்றச்சாட்டுகளாகவும், தவறான தகவல்களாகவும் பரப்பப்படும் செய்திகளைப் பொதுமக்கள் அப்படியே நம்பிவிடக் கூடாது என வலியுறுத்தினார்.
தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஆளுக்கொரு கருத்து பேசப்பட்டாலும், சட்ட வரம்புகளை மீறும் பட்சத்தில் கண்டிப்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். பொதுமக்கள் எந்தவொரு தகவலையும் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, தகுந்த ஆதாரங்கள் உள்ளதா என்பதைச் சரிபார்த்த பின்னரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
