ஐபிஎல் கிரிக்கெட்டில் 16-வது போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்.சி.பி. அணிகள் விளையாடி வருகின்றன. மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இருந்த போதிலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பில் சால்ட், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆர்ச்சர் முதல் ஓவரை வீசினார். ஆட்டத்தின் முதல் பந்திலேயே சால்ட் ஆட்டமிழந்தார்.
அடுத்து விராட் கோலியுடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் ஓவரில் படிக்கல் 2 பவுண்டரியும், கோலி ஒரு பவுண்டரியும் அடித்தனர். இதனால் 13 ரன்கள் கிடைத்தன.
2-வது ஓவரை பர்கர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு பைஸ் பவுண்டரி, ஒரு வைடு பவுண்டரியுடன் 19 ரன்கள் கிடைத்தன. 3-வது ஓவரை ஆர்ச்சர் வீசினார். இந்த ஓவரில் விராட் கோலி 3 பவுண்டரிகள் விளாசினார். என்றாலும் கடைசி பந்தில் படிக்கல் ஆட்டமிழந்தார். அவர் 7 பந்தில் 14 ரன்கள் சேர்த்தார். அப்போது ஆர்சிபி 3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் விளாசியிருந்தது.
4-வது ஓவரை சந்தீப் சர்மா வீசினார். இந்த ஓவரில் கடைசி இரண்டு பந்தையும் கோலி பவுண்டரிக்கு விரட்டினார். 4 ஓவரில் ஆர்சிபி 2 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் அடித்திருந்தது.
5-வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் விராட் கோலி க்ளீன் போல்டானார். அவர் 16 பந்தில் 7 பவுண்டரியுடன் 32 ரன்கள் சேர்த்தார். அப்போது ஆர்சிபி 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. 6-வது ஓவரை பர்கர் வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆர்சிபி பவர்பிளேயிலா் 3 விக்கெட் இழப்பிற்று 61 ரன்ள் எடுத்திருந்தது.
7-வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் குருணால் பாண்ட்யா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் ஜித்தேஷ் சர்மா (5) டிம் டேவிட் (13), ரொமாரியோ ஷெப்பர்டு (22) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். என்றாலும் கேப்டன் ரஜத் படிதார் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடினார். விக்கெட்டுகள் மளமளவென விழுந்ததால் பேட்டர் வெங்கடேஷ் அய்யர் இம்பேக்ட் சப் வீரராக களம் இறங்கினார்.
35 பந்தில் அரைசதம் அடித்த ரஜத் படிதார், 18-வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 40 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 63 ரன்கள் விளாசினார். இவர் ஆட்டமிழக்கும்போது ஆர்சிபி 17.1 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்தது.
9-வது விக்கெட்டுக்கு அய்யர் உடன் புவி ஜோடி சேர்ந்தார். 18-வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தன. அப்போது ஆர்.சி.பி. 171 ரன்கள் எடுத்திருந்தது. 19-வது ஓவரை பிரிஜேஷ் சர்மா வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் கிடைத்தன. கடைசி ஓவரை சந்தீப் சர்மா வீசினார். கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 21 ரன்கள் கிடைக்க ஆர்.சி.பி. 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. வெங்கடேஷ் அய்யர் 15 பந்தில் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
