Chennai News Live Updates: சென்னையில் மாலை முதல் மழை வலுக்கும்

சென்னையில் பெட்ரோல் – டீசல் இன்றைய விலை நிலவரம்

சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கழிவுநீர்க் குழாய்களை சுத்தம் செய்ய 13 நவீன இயந்திரங்கள் – டெண்டர் கோரிய அரசு

சென்னை பெரம்பூரில் நிலத்தடி கழிவுநீர்க் குழாய்களைச் சுத்தம் செய்வதற்காக 13 நவீன இயந்திரங்களை வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொகுதி ஒதுக்கீட்டு நிதியின் மூலம் இதற்கான கொள்முதல் மேற்கொள்ளப்படும் தகவல் வெளியாகி உள்ளது.

  • Oct 20, 2026 10:15 IST

    சென்னையில் மாலை முதல் மழை வலுக்கும் – பிரதீப் ஜான் தகவல்

    சென்னையில் அக்டோபர் 20-ஆம் தேதி பகலில் விட்டு விட்டு திடீரென மழை பெய்யக் கூடும். தொடர்ந்து, மாலையில் தீவிரமாகும் மழை இரவு முழுவதும் நீடிக்க வாய்ப்புள்ளது. நாளை அதிகாலை வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக எல் நினோ தாக்க ஆய்வுக் குழு உறுப்பினர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Source link