காந்தி நகர்: மம்தா பானர்ஜியின் முதுகில் குத்திவிட்டு தனி அணியாக செயல்பட்டு வரும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்பியுமான யூசுப் பதானுக்கு குஜராத் அரசு ‘பிளாட்’ ஒன்றை பரிசாக வழங்கி உள்ளது. இந்த பிளாட்டை கைப்பற்ற யூசுப் பதான் 14 ஆண்டுகளாக போராடிய நிலையில் மம்தா பானர்ஜியின் கட்சியை விட்டு வெளியேறிய 4 மாதத்திலேயே இலவசமாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது குஜராத் பாஜக அரசு.
மேற்கு வங்க மாநிலம் பஹராம்பூர் லோக்சபா எம்பியாக இருப்பவர் யூசுப் பதான். இவருக்கு மேற்குவங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தான் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அந்த தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றி பெற செய்தார்.
யூசுப் பதான் குஜராத்தை சேர்ந்தவர். ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 7 ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடினார். அப்போது 2 முறை அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் மேற்கு வங்கத்தில் யூசுப் பதானுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
இதனால் தான் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் கூட யூசுப் பதானை 2025 லோக்சபா தேர்தலில் பஹராம்பூர் தொகுதியில் களமிறக்கி வெற்றி பெற வைத்தார் மம்தா பானர்ஜி. ஆனால் சமீபத்திய சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து மேற்குவங்கத்தில் ஆட்சியை பறிகொடுத்தது. இதையடுத்து அவரது கட்சி துண்டு துண்டாக உடைந்தது. 58 எம்எல்ஏக்கள்தனி அணியாகவும், 20 லோக்சபாஎம்பிக்கள் தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த 20 அதிருப்தி எம்பிக்களில் யூசுப் பதானும் ஒருவர். மம்தாபானர்ஜியை எதிர்த்து தனி அணியாக செயல்படும் 20 எம்பிக்கள் இந்திய தேசியவாத மக்கள் கட்சி (Nationalist itiens Party of India or NCPI) என்ற பெயரில் செயல்பட்டு வருவதோடு, மத்திய பாஜக அரசுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர்.
இந்நிலையில் தான் தற்போது குஜராத் அரசு யூசுப் பதானுக்கு பெரிய கிப்ட் ஒன்றை வழங்கி உள்ளது. யூசுப் பதான் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் தனது சகோதரரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இர்பான் பதான் மற்றும் குடும்பத்தினருடன் குஜராத்மாநிலம் வதோதராவில் உள்ள தாண்டல்ஜா பகுதியில் வசித்து வருகிறார். இவரது பங்களாவையொட்டி வதோதரா மாநகராட்சிக்கு சொந்தமான இடம் (பிளாட்)உள்ளது. இந்த இடம் மொத்தம் 978 சதுரமீட்டராகும்.
இந்த பிளாட்டை பொது ஏலமின்றி 99 ஆண்டுகள் குத்தகைக்கு தனக்கு வழங்கும்படி யூசுப்பதான் கடந்த 2012ம் ஆண்டு வதோதரா மாநகராட்சியிடம் கேட்டார். தனது வீட்டின் அருகே காலியிடம் இருப்பது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறி இந்த நிலத்தை கேட்டு இருந்தார். ஆனால் வதோதரா மாநகராட்சி கொடுக்க மறுத்தது.
ஆனால் தற்போது யூசுப் பதான், மம்தா பானர்ஜியை விட்டு வெளியேறி பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளார். இதற்கிடையே தான் யூசுப் பதான் கேட்ட பிளாட்டை அவருக்கு வழங்க குஜராத் அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மொத்தமுள்ள 978 சதுரமீட்டர் பிளாட்டில் 500 சதுரமீட்டரை இலவசமாக அவருக்கு வழங்கவும், மீதமுள்ள 478 சதுரமீட்டர் பிளாட்டை தற்போதைய மார்க்கெட் விலையில் 50 சதவீத தள்ளுபடியுடனும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி வதோதரா மாநகராட்சியின் ஆணையர் அருண் மகேஷ் கூறுகையில், ”நிலத்தை யூசுப் பதானுக்கு ஒதுக்கீடு செய்ய அரசிடம் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி நிலைக்குழு மற்றும் பிற குழுககளுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுத்து அவருக்கு பிளாட் ஒதுக்கீடு செய்யப்படும்” என்றார்.
