சரிந்து விழுந்த சிலுவை; தேவாலயத்திற்குள் நேர்ந்த சோகம்

வாழ்க்கையின் நிலையில்லாத்தன்மை மற்றும் மரணம் குறித்துச் சொற்பொழிவாற்றிய பாதிரியார்,  தேவாலயத்திற்குள்ளேயே ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்துள்ள சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தென் அமெரிக்க நாடான ஈக்வடார் நாட்டின், குவாயாகில் பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியார் பாட்ரிசியோ சான்செஸ் (53) நேற்று முன் தினம் மக்களிடம் திருப்பலி உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது, அவருக்குப் பின்னாள் சுவரில் பொருத்தப்பட்டிருந்த பிரமாண்ட சிலுவை, பாதிரியாரின் மேலே விழுந்தது.  

சிலுவை விழுந்த அதிர்ச்சியில் பாதிரியார் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பாதிரியார் உயிர் இழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேரலையாக ஒளிபரப்பப்பட்ட இந்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.  

பாதிரியார் பாட்ரிசியோ சான்செஸ், அந்த தேவாலயத்தின் பங்கு தந்தையாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது.