இந்திய டெஸ்ட் அணி, முன்புபோல் பலமிக்க அணியாக இருக்கவில்லை. தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீரும், தேர்வுக்குழு தலைவராக அஜித் அகார்கரும் வந்தப் பிறகு, சீனியர்களை ஓரேயடியாக ஓரங்கட்டினார்கள். தற்போது, ரவீந்திர ஜடேஜா மட்டுமே, சீனியர் வீரராக இருக்கிறார். மேலும், தனக்கு பிடித்த வீரர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில், கம்பீர் தீவிரம் காட்டி வருகிறார். எடுத்துக்காட்டாக ஹர்ஷித் ராணாவை கூறலாம்.
மேலும், தனக்கு பிடிக்காத வீரர்கள் மற்றும் சீனியர் வீரர்களை தொடர்ச்சியாக ஓரங்கட்டி வருகின்றனர். இப்படி, திடீரென்று சீனியர் வீரர்களை அடியோரு ஓரங்கட்டியதால், இந்திய டெஸ்ட் அணி, தற்போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது. அதுமட்டுமல்ல, முன்பெல்லாம், இந்திய டெஸ்ட் அணியில், முழுநேர டெஸ்ட் பேட்டர்கள் ஒருசிலர் இருப்பார்கள்.
சேத்தேஸ்வர் புஜாரா போன்றவர்கள் இருந்த நிலையில், தற்போது இந்திய டெஸ்ட் அணியில் முழுநேர டெஸ்ட் பேட்டர் இல்லை. புஜாராவுக்கு அடுத்து இவர் இடத்தை சர்பரஸ் கானுக்கு கொடுத்தனர். ஆனால், கம்பீரின் பகையை சம்பாதித்த காரணத்தினால், சர்பரஸ் கானுக்கு தற்போது டெஸ்ட் அணியின் பிளேயிங் 11-ல் ரெகுலராக இடம் கிடைப்பதில்லை.
என்ன நடந்தது? இந்திய அணி, கடைசியாக ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியபோது, 4ஆவது டெஸ்டில், இந்தியா தோல்வியை சந்தித்ததால், கம்பீர் கடும் கோபமடைந்தார். அதுவும், 184 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்ததால், ஓய்வு அறையில் சீனியர் வீரர்களை கம்பீர் கடுமையாக திட்டினார். இந்த விஷயம் உடனே செய்திகளில் வந்தது. இதனைத் தொடர்ந்து, கம்பீரை பலரும் கடுமையாக திட்ட ஆரம்பித்தனர்.
ஓய்வு அறையில் பேசிய விஷயம் எப்படி வெளி உலகத்திற்கு தெரிய வந்தது என கம்பீர் விசாரணை நடத்தியபோதுதான், அணியில் இருந்த சர்பரஸ் கான், தனது பத்திரிகையாளர் நண்பரிடம் இந்த தகவலை தெரிவித்திருக்கிறார் என்பது கம்பீருக்கு தெரிய வந்தது. அதன்பிறகு, சர்பரஸ் கானுக்கு இந்திய டெஸ்ட் அணியின் பிளேயிங் 11-ல் ரெகுலராக வாய்ப்பு கொடுக்கவில்லை.
தற்போதும் கூட, நியூசிலாந்து டெஸ்ட் தொடரில், சர்பரஸ் கானை சேர்க்கவில்லை. அவரது இடத்தை தேவ்தத் படிக்கல்லுக்கு வழங்கிவிட்டார். இப்படி, புறக்கணிக்கப்பட்ட நிலையில், தற்போது ரஞ்சிக் கோப்பையில் ஆடி வரும் சர்பரஸ் கான், அபாரமாக விளையாடி, 150 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.
மொத்தம், 228 பந்துகளை எதிர்கொண்ட சர்பரஸ் கான், அதில் 19 பவுண்டரிகள் உட்பட 154 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவரது அபார பேட்டிங் காரணமாக, ஹிமாச்சல் பிரதேச அணிக்கு எதிராக மும்பை அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெறும் நிலையில் இருக்கிறது.
சர்பரஸ் கான், இந்திய டெஸ்ட் அணிக்காக 6 போட்டிகளில் 11 இன்னிங்ஸில் 37.10 சராசரியில் 371 ரன்களை எடுத்துள்ளார். இதில், ஒரு சதம், 3 அரை சதம் அடங்கும். பெங்களூரில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் இன்னிங்ஸில் 150 ரன்களை குவித்து அசத்தியிருந்தார்.
மேலும், 65 முதல்தர டெஸ்ட் போட்டிகளில் 62.50 சராசரியில் 5315 ரன்களை அடித்துள்ளார். இதில், 18 சதங்களும், 16 அரை சதங்களும் அடங்கும். ஒரு போட்டியில், 301* ரன்களை குவித்து அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
