இன்றைய காலகட்டத்தில் நிறையப் பேர் நிலையான வைப்பு நிதி எனப்படும் ஃபிக்சட் டெபாசிட் (FD) திட்டத்தில் அதிகமான அளவில் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக, இளம் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்திட்டத்துக்கு முன்னணி வங்கிகள் நல்ல வட்டி வருமானத்தைக் கொடுக்கின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு கால அளவுகளில் பல ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதற்கான வட்டி விகிதங்கள் கால அளவைப் பொறுத்து மாறுபடும்.
1 ஆண்டில் வட்டி விகிதம் 6.25 சதவீதம்.
2 ஆண்டுகளில் வட்டி விகிதம் 6.30 சதவீதம்.
3 ஆண்டுகளில் வட்டி விகிதம் 6.30 சதவீதம்.
4 ஆண்டுகளில் வட்டி விகிதம் 6.35 சதவீதம்.
5 ஆண்டுகளில் வட்டி விகிதம் 6.35 சதவீதம்.
10 ஆண்டுகளில் வட்டி விகிதம் 6 சதவீதம்.
1 ஆண்டு டெபாசிட்களுக்கான வருமானம்!
நீங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஓராண்டு நிலையான வைப்புநிதியைத் தொடங்கினால் இவ்வங்கி 6.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. திட்டம் முதிர்வடையும்போது, நீங்கள் மொத்தமாக ரூ. 5.31 லட்சம் அல்லது ரூ. 31,990 நேரடி லாபத்தைப் பெறுவீர்கள்.
2 ஆண்டு டெபாசிட்களுக்கான வருமானம்!
2 ஆண்டு முதிர்வுக் காலம் கொண்ட நிலையான வைப்புநிதிகளுக்கு வங்கி 6.30 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. நீங்கள் ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்தால் முதிர்வு காலத்தில் ரூ. 5.66 லட்சம் பெறுவீர்கள். இதன் மொத்த வட்டி விகிதம் ரூ. 66,584 ஆகும்.
3 ஆண்டு டெபாசிட்களுக்கான வருமானம்!
3 ஆண்டு நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 6.30 சதவீதம் ஆகும். ரூ. 5 லட்சம் முதலீட்டில் முதிர்வுத் தொகையாக ரூ. 6.03 லட்சம் கிடைக்கும். இதன் மூலம் மூன்று ஆண்டுகளில் நீங்கள் மொத்தமாக ரூ. 1.03 லட்சம் லாபம் ஈட்டுவீர்கள்.
4 ஆண்டு டெபாசிட்களுக்கான வருமானம்!
நீங்கள் ரூ. 5 லட்சத்தை 4 வருட காலத்திற்கு, 6.35 சதவீத வட்டி விகிதத்தில் முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் ரூ. 6.43 லட்சம் பெறுவீர்கள். இதன் மூலம் மொத்த லாபம் ரூ. 1.43 லட்சம் ஆக இருக்கும்.
5 ஆண்டு டெபாசிட்களுக்கான வருமானம்!
பஞ்சாப் நேஷனல் வங்கி 5ஆண்டு வரி சேமிப்பு அல்லது சாதாரண நிலையான வைப்புத்தொகைக்கு 6.35 சதவீத வருமானத்தை வழங்குகிறது. ரூ. 5 லட்சம் முதலீட்டிற்கு முதிர்வு காலத்தில் ரூ. 6.85 லட்சம் கிடைக்கும். இதில் ரூ. 1.85 லட்சம் வட்டி வருமானமாக இருக்கும்.
10 ஆண்டு டெபாசிட்களுக்கான வருமானம்!
நீங்கள் ரூ. 5 லட்சத்தை 10 வருட காலத்திற்கு டெபாசிட் செய்தால் பஞ்சாப் நேஷனல் வங்கி 6 சதவீத வட்டி விகிதத்தை வழங்கும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு காலத்தில் நீங்கள் மொத்தமாக ரூ. 9.07 லட்சம் பெறுவீர்கள். அதாவது நீங்கள் ரூ. 4.07 லட்சம் கணிசமான லாபம் ஈட்டுவீர்கள்.
Source link
