‘ரீல்ஸ்’ போடுபவர்களுக்குப் பரிசு; முதல்வர் அதிரடி அறிவிப்பு

ரீல்ஸ் எடுத்து சமூக  வலைத்தளங்களில் பரப்புவோருக்குப் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பை வெளியிட்டிருப்பது இணயவாசிகளிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கர்நாடக மாநிலம், மைசூர் பகுதியில் ஒவ்வொரு வருடமும் தசரா பண்டிகை வெகுவிமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையின் போது, அங்கு தினமும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதோடு மட்டுமல்லாமல் உலகப் புகழ்பெற்ற ஜம்புசவாரி ஊர்வலம், மின்விளக்கு அலங்காரங்கள், உணவுத் திருவிழா உள்ளிட்டவையும் நடைபெறும்.  

இந்நிலையில், மைசூரு தசரா திருவிழாவை முன்னிட்டு, சமூக வலைத்தளங்களில் சிறந்த ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவோருக்குப் பரிசுத்தொகை வழங்கப்படும் எனக் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கண்டென்ட் கிரியேட்டர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த சிறப்பான போட்டியைக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார். 

பொதுமக்கள் மற்றும் கிரியேட்டர்கள் தாங்கள் எடுக்கும் தசரா ரீல்ஸ் வீடியோக்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும்போது, மைசூரு தசராவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கமான @mysoredasara_2026 என்ற கணக்கைக் குறிப்பிட்டு டேக் செய்ய வேண்டும்.  

சிறந்த 100 ரீல்ஸ்களுக்கு பரிசு என்ற அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், போட்டிக்கான பரிசு விவரங்கள், விதிமுறைகள் மற்றும் இறுதி தேதி உள்ளிட்டவை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.