டெஹ்ரான்: 'லெபனான் போர் நிறுத்தம் மற்றும் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்படும் வரை,

டெஹ்ரான்: ‘லெபனான் போர் நிறுத்தம் மற்றும் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்படும் வரை, பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்கா அமைதி பேச்சை துவங்க முடியாது’ என, ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாதில் இன்று நடக்க உள்ள அமெரிக்கா – ஈரான் இடையேயான பேச்சு துவங்கப்படுவதற்கு முன்னதாக இரு முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது. இது குறித்து, ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் காலிபாப் வெளியிட்டுள்ள அறிக்கை:

லெபனான் மற்றும் ஹெஸ்பொல்லா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும். லெபனானில் அமைதி ஏற்படாமல் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த முடியாது என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது. இதேபோன்று, சர்வதேச வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரான் நிதிகள் மற்றும் சொத்துக்களை அமெரிக்கா உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இவை இரண்டும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அமெரிக்காவுடன் அமைதி பேச்சு துவங்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் இந்த திடீர் நிபந்தனைகளால் இஸ்லாமாபாதில் இன்று அமைதி பேச்சு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Source link