புதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில் திவால் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, நிதி வசூலை விட வீடுகளை கட்டி

புதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில் திவால் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, நிதி வசூலை விட வீடுகளை கட்டி முடிப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என, இந்திய திவால் தீர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து அந்த குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது:

ரியல் எஸ்டேட் துறையில் திவால் வழக்குகள் பிரத்யேகமான சவால்களை எதிர்கொள்கின்றன. நிறுவனங்கள் திவாலாகும்போது, ஏராளமான வீட்டு வாடிக்கையாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு பணம் திரும்ப கிடைப்பதைவிட, வீடு கட்டி முடிக்கப்படுவதே மு க்கியமாக இருக்கிறது.

எனவே, திவால் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, கட்டடங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி முடிக்கப்படுவதை உறுதி செய்வதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இது தவிர, திவால் சட்டத்துக்கும் 2016 ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத்துக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் துறையில் திவால் நடவடிக்கைகள் தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்காக, கடந்த செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி இந்த குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவில், கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் வீட்டுவசதி அமைச்சக அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

ரியல் எஸ்டேட் துறையில் உள்ள 55 முக்கிய பிரச்னைகளை ஆய்வு செய்து, கிட்டத்தட்ட 155 பரிந்துரைகளை இக்குழு வழங்கியுள்ளது.

திவால் நடவடிக்கைகளின் போது சட்ட சிக்கல்கள் குறைந்து, முடங்கி கிடக்கும் வீட்டுவசதி திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், கட்டுமான துறையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் அதிகரிக்க செய்யவும் இந்த மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

Source link