தேவா இறந்த நான்காவது நாள் தம்பி மகன் கார்த்திக் சபேஷ் மரணம்

நடிகர் கார்த்திக் சபேஷ்: இசையமைப்பாளர் தேவா கடந்த சனிக்கிழமை மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தேவா வீட்டில் மேலும் ஒரு சோகம் நடந்திருக்கிறது. அதாவது தேவாவின் தம்பி மகன் சபேஷ் கார்த்திக் இன்று காலை மரணம் அடைந்தார். அவரின் வயது 37.

சிலம்பரசன் நடித்த வல்லவன், தம், பட்டத்து யானை, என்.ஹெச். 4, பர்மா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று அவரின் உயிர் பிரிந்தது. கார்த்திக் சபேஷின் உடன் இன்று மாலை 4.30 மணி அளவில் வளசரவாக்கத்தில் இருக்கும் மின்மயானத்தில் தகனம் செய்யப்படவிருக்கிறது.

அடுத்தடுத்து மரணம்: அக்டோபர் 17ம் தேதி தான் தேவா இறந்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் வெறும் 37 வயதே ஆன நடிகர் கார்த்திக் சபேஷ் இறந்தது குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தேவா குடும்பத்தில் இப்படி மீண்டும் ஒரு துயரம் நடந்துவிட்டதே என ரசிகர்கள் ஒரு பக்கம் சமூக வலைதளங்களில் புலம்பித் தவிக்கிறார்கள்.

அக்டோபர் மரணங்கள்: கார்த்திக்கின் அப்பாவும், தேவாவின் தம்பியுமான சபேஷ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். சபேஷ் இறந்து ஓராண்டு முடிவதற்குள் அவரின் அண்ணன், மகன் என இரண்டு பேர் அதுவும் அதே அக்டோபர் மாதத்தில் இறந்துவிட்டார்கள்.

கடவுளே இது என்ன கொடுமை. ஒரு இழப்பு ஏற்பட்டு நான்காவது நாளே அதே குடும்பத்தில் இன்னொரு இழப்பு என்பதை கேட்கவே அதிர்ச்சியாக உள்ளது. பட விழாக்களில் கலந்து கொண்டு ஆக்டிவாக இருந்து வந்த தேவாவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததையே நம்ப முடியவில்லை. அப்படி இருக்கும்போது அவர் வீட்டில் ஒரு இளம் வாரிசு இறந்திருக்கிறார். இந்த இரண்டு இழப்புகளில் இருந்து மீண்டு வர இறைவன் தான் அவர்களுக்கு தைரியத்தை கொடுக்க வேண்டும்.

மூன்று உயிர்கள்: தேவா குடும்பத்தில் ஓராண்டுக்குள் மூன்று பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். தன் திறமை மற்றும் நல்ல குணத்தால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த தேவா இசையமைத்த நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் பாடல் ஆயுத பூஜை நாளான நேற்று பல இடங்களில் ஒலித்ததை கேட்க முடிந்தது. மேலும் சமூக வலைதளங்களில் அந்த பாடல் வீடியோக்களை பார்க்க முடிந்தது.

நீங்கள் இப்படி திடீரென்று இறந்துவிடுவீர்கள் என எதிர்பார்க்கவே இல்லை சார் என நேற்று ரசிகர்கள் கவலை அடைந்த நிலையில் இன்று மேலும் ஒரு மரண செய்தி வெளியானதும் பண்டிகை காலத்தில் அந்த இசை குடும்பத்திற்கு இப்படி வேதனை மேல் வேதனையா என சினிமா ரசிகர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

பாடிய குடும்பத்தார்: சக்கரமல்லூரில் இருக்கும் பண்ணை வீட்டு நிலத்தில் தேவாவின் உடலை அடக்கம் செய்த பிறகு மகன் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட குடும்பத்தார் பாட்டு பாடி இசை மூலம் பிரியாவிடை கொடுத்தாார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link