IPL 2027 – சிஎஸ்கே டார்கெட் செய்து வைத்திருக்கும் வீரரை, ஏலத்தில் வாங்க SRH, KKR போட்டி போட முடிவு – srh and kkr team want to buy csk target player in ipl 2027 mini auction

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலத்திற்கு தீவிரமாக தயாராகி வருகிறது. குறிப்பாக, பலவீனங்களை கண்டறிந்து, அதனை சரி செய்யும் வேலையில், தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான் தீவிரம் காட்டி வருகிறார்.

மிடில் ஆர்டர் பலவீனம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், மிடில் வரிசையில் அதிரடியாக ஆடக் கூடியவர் என்றால், டிவோல்ட் பிரேவிஸ் மட்டுமே. அவரை நம்பி மட்டுமே மிடில் வரிசை இருக்கிறது. அதுவும், பிரேவிஸால் தொடர்ச்சியாக 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட முடியாத நிலைமை இருக்கிறது. இந்நிலையில், மிடில் வரிசையை பலமிக்கதாக கட்டமைக்கும் பணியை ஜாகீர் கான் செய்து வருகிறார்.

இதற்காக, உள்ளூர் கிரிக்கெட்டில், பஞ்சாப் அணிக்காக அதிரடியாக ஆடும் பேட்டர் உதாய் சகரனை வாங்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. இதற்காக, உதய் சகரன், சிஎஸ்கேவுக்கு வந்து டிரையலில் கலந்துகொண்டு சென்றுவிட்டார்.

உதய் சகரன் ஒரு அதிரடி பேட்டர். பஞ்சாப் டி20 லீக் தொடரில், 6 போட்டிகளில் 58.50 சராசரி, 192.86 ஸ்ட்ரைக் ரேட்டில் 351 ரன்களை குவித்து அசத்தினார். இதில், 5 அரை சதங்களும் அடங்கும். குறிப்பாக, நாக்அவுட் போட்டியில், வெறும் 20 பந்துகளில் 60 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். இதனால்தான், உதய் சகரனை, டிரையலுக்கு அழைத்தனர். டிரையலில் உதய் சகரன் அபாரமாக செயல்பட்டதால், இவரை மினி ஏலத்தில் வாங்க சிஎஸ்கே முடிவு செய்தது.

இந்நிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், உதய் சகரனை ஏலத்தில் வாங்க முடிவு செய்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, தரமான இந்திய ஓபனர் தேவை. இதனால்தான், இவரை டார்கெட் செய்ய முடிவு செய்துள்ளனர். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டிராவிஸ் ஹெட்டை வெளியேற்றிவிட்டு, உதய் சகரனை அணிக்குள் கொண்டுவர முடிவு செய்துள்ளர். இரண்டு உள்நாட்டு ஓபனர்கள் இருந்தால், கூடுதலாக ஒரு வெளிநாட்டு ஆல்ரவுண்டர் அல்லது பௌலரை சேர்க்க முடியும் என்பதால்தான், சன் ரைசர்ஸ் இந்த முடிவினை எடுத்துள்ளது.

இதனால், ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலத்தில், உதய் சகரன் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவரை வாங்க, இந்த மூன்று அணிகள் மட்டுமல்ல, மற்ற அணிகளும் கூட கடும் போட்டிபோட அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, கோடிகளை கொட்ட தயங்காத லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸும் உதய் சகரனை வாங்க தீவிரம் காட்டும் எனக் கருதப்படுகிறது.

இதனால், ஐபிஎல் 2027 சீசனில், உதய் சகரன், 20+ கோடிகளில் ஏலம் போக அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

கம்பேக் கொடுத்தாக வேண்டும்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த மூன்று சீசன்களின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால், ஐபிஎல் 2027 சீசனில் அதிரடி கம்பேக்கை கொடுத்தாக வேண்டும். இதனால், முக்கிய வீரர், முக்கியமில்லாத வீரர் என்று பார்க்காமல், திறையை மட்டும் வைத்து மதிப்பீடு செய்து அணியை கட்டமைக்க ஜாகீர் கான் முடிவு செய்துள்ளார்.
இதனால், கடந்த சீசனில் 123 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியதுபோ, ஐபிஎல் 2027 சீசனின் துவக்க போட்டிகளில், ருதுராஜ் கெய்க்வாட் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினால், அவரை நீக்கவும் கூட வாய்ப்புள்ளது.

Source link