தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்ட நிலையில் அவ்வப்போது மழை பெய்த வண்ணம் இருக்கிறது சில சமயங்களில் காலையிலும் சில சமயங்களில் இரவுகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் தான் டெல்டாவதர்மன் ஹேமச்சந்தர் வரும் காலங்களில் மழை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பதிவிட்டு இருக்கிறார் இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை நோக்கி முழுமையான கீழே காற்று திரும்புவதாக அவர் தெரிவித்திருக்கிறார். இதனால் அக்டோபர் 21 முதல் 24 வரையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் எனவும் அவர் கணித்திருக்கிறார்
எங்கு நகரும்?
வடதமிழக கடற்கரையில் நீடிக்கும் காற்று சுழற்சி, இலங்கை மற்றும் மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும் எனவும் இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் முழுமையான கீழைக்காற்று தமிழகம் நோக்கி திரும்பும். இதன் காரணமாகவே அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவம் மழை தீவிரத் தன்மை எட்டும் எனவும் அவர் கணித்திருக்கிறார்
இன்று முதல் முழுமையான மழை காலம்
இந்தியா முழுக்க நிலவை வந்த சூப்பர் எலினோவின் முதல் கட்ட தாக்கம் கடந்த அக்டோபர் 15 அன்று விலகியது அதன் பின்பு வடகிழக்கு பருவ மழை தென்னிந்திய முழுக்க தொடங்கியது. ஆனாலும் பகலில் பெரிய அளவு மழை பெய்யாமல் இரவில் மட்டுமே பெய்து வருவதால், வானிலை கணிக்க முடியாததாக மாறியது.
இந்த சூழலில் தான் இன்று முதல் தமிழகம் முழுக்க முழுமையான மழை காலம் காத்திருக்கிறது என அவர் பதிவிட்டு இருக்கிறார்
எங்கெல்லாம் மழை இருக்கும்
தமிழகத்தின் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் மழை இருக்கும் என்பது குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் குறிப்பிட்டு இருக்கக்கூடிய பதிவில் இன்று இரவு முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கி சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் மழை பரவலாக பெய்யும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்
அக்ட் 21 முதல் 23 வரையிலான மூன்று நாட்கள் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் & மேற்கு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் முதல் சுற்று மழை தீவிரமடையும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்
கடலோர மாவட்டங்களில் நாளை முதல் அதிகாலை/காலை நேரத்தில் விட்டு விட்டு மழை பதிவாகும். உள் மாவட்டங்களில் மாலை/இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்யும் வடகடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அக்ட் 21,22 தேதிகளில் பரவலாக கனமழையும் ஒருசில இடங்களில் மிககனமழையும் பதிவாகும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
