தனுஷ் அரசியல் வருகைக்கு த.வெ.க வரவேற்பு; விஜய் சிறந்த உத்வேகமாக மாறியுள்ளதாக புகழாரம்

நடிகர் தனுஷ் ரசிகர் மன்றம் தற்போது நற்பணி இயக்கமாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் அவர் அரசியலில் களமிறக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், தனுஷ் அரசியல் வருகையை த.வெ.க வரவேற்றுள்ளது. சினிமாத்துறையிலிருந்து முதலமைச்சர் நாற்காலி வரையிலான முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பயணம், புதிய அரசியல் தொடக்கங்களுக்கு  ஒரு சிறந்த உத்வேகமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

‘கார்த்திகா எங்களையும் விமர்சித்தார்; இப்படி பெண் தலைவர்களை கைது செய்து வாய்ப் பூட்டு போட நாங்கள் நினைக்கவில்லை’: ஸ்டாலின் கண்டன அறிக்கை

அரசியலில் நுழைவது குறித்து நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. என்.டி.டி.வி ஊடகத்திற்கு பேட்டியளித்த த.வெ.க செய்தித் தொடர்பாளர் எம். சத்ய குமார், அரசியலில் புதிதாக நுழைய யோசிப்பவர்களுக்கு தங்களது பயணம் உத்வேகமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.

“புதிய அரசியல் தொடக்கங்களுக்கு த.வெ.க ஒரு உத்வேகமாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் விஜய் இந்த நிலையை அடைய 30 ஆண்டுகள் உழைத்துள்ளார். இது எளிதான காரியம் அல்ல. மாற்று அரசியல் சக்திகள் உருவாகலாம் என்றாலும், அவர்களின் பலமும் அதைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் திறனுமே முக்கியமானது” என்றார்.

விஜய்யின் அணுகுமுறை எதிர்காலத்தில் அரசியலில் நுழைபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக மாறக்கூடும் என்று கூறிய த.வெ.க செய்தித் தொடர்பாளர், ஒரு அரசியல் கட்சியை நடத்துவதற்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் முழுநேர அர்ப்பணிப்பு தேவை என்று குறிப்பிட்டார்.

விஜய் மற்றும் தனுஷ் அமைப்புகளுக்கு இடையிலான ஒற்றுமைகள்

இரு நடிகர்களின் அமைப்புகளின் நகர்வுகளுக்கு இடையே தெளிவான ஒற்றுமைகள் உள்ளன. அரசியலில் நுழைவதற்கு முன்பு, விஜய் தனது ரசிகர் அமைப்பை ஒரு நற்பணி மன்றமாக மாற்றினார். இலவச உணவு வழங்குதல், நூலகங்கள் திறத்தல் மற்றும் சட்ட உதவி வழங்குதல் போன்ற செயல்பாடுகளுக்கு ஆதரவாளர்களை ஒருங்கிணைத்தார். இந்த அமைப்பே இறுதியில் த.வெ.க-வின் நிறுவனக் கட்டமைப்பிற்கான அடித்தளமாக மாறியது. தனுஷின் ரசிகர் மன்றமும் தற்போது இதேபோன்று உருவெடுத்து வருவதாக கூறப்படுகிறது. 

Source link