”வாக்குத்திருட்டை நிறுத்து”; ஞானேஷ்குமாருக்கு எதிராக இங்கிலாந்தில் போராட்@ம்

வாக்குத்திருட்டு மற்றும் எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்புடைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக நல அமைப்புகள் நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.  

இந்நிலையில், இது தொடர்பாக வெளிநாடுகளிலும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இந்திய வெளிநாட்டுக் காங்கிரஸ் இளைஞர் பிரிவு போராட்டம் நடத்தியது. இதற்கு,  சேவ் டெமாக்ரசி, எஸ்எப்ஐ மற்றும் சவுத் ஏசியா சாலிடிட்டி குரூப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவளித்தன. 

லண்டன் நாடாளுமன்ற தெருவில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே கூடிய மாணவர்கள், ”வாக்கு திருட்டை நிறுத்து” என்ற கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள், இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை உடைத்திருக்கிறது. அதனால், நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்டவை போராட்டம் நடத்தி வரும் வேளையில், தற்போது நாடு கடந்தும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. நாடு முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த அசாதாரண சூழலிலும் ஞானேஷ்குமார் பதவி விலகவில்லை. இந்நிலையில், ஞானேஷ்குமாரை அரசு இயந்திரம் பாதுகாப்பதாகாத குற்றச்சாட்டுகளும் எழுந்தவண்ணம் உள்ளன.