‘பிராப்பர்ட்டி ஷேர் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்’ நிறுவனம், ‘புராப்ஷேர் செலஸ்டியா ரீட்ஸ்.,’ வெளியீட்டின் வாயிலாக 244.65 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிதி, ஆமதாபாதின் நேரு நகரில் அமைந்துள்ள செலஸ்டியா எனும் உயர்தர வர்த்தக கட்டடத்தை வாங்க பயன் படுத்தப்பட உள்ளது.
மொத்த நிதியில் கிட்டத்தட்ட 238 கோடி ரூபாய் சொத்து வாங்குதல் மற்றும் தொடர்புடைய மற்ற செலவுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடங்கிய நாள் ஏப்ரல் 10, 2026
முடியும் நாள் ஏப்ரல் 16, 2026
பங்கு விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.10.5 லட்சம் வரை
