தசரா பண்டிகை பல்வேறு மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவிலும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அந்த வகையில், இந்த விழாவின் ஒரு பகுதியாக போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. அந்த போஸ்டர்கள் வித்தியாசமான முறையிலிருந்ததால் அது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், 10 தலை கொண்ட ராவணன் படங்களுடன் அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் மற்றும் அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளிட்டோரின் படங்களும் இடம் பெற்றிருந்தன. அதாவது, அந்த 10 தலைகளில் ராகுல், அகிலேஷ் மற்றும் எலான் மஸ்க் உள்ளிட்டோரின் தலைகள் இருக்கும்படியாக சித்தரிக்கப்பட்டு, ‘சனாதன இந்​தி​யாவின் எதிரி ராவணன்’ தலைப்புடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த போஸ்டர்களில் வழக்​கறிஞர் பிரசாந்த் பூஷண், வங்​கதேசத்​தின் முகமது யூனுஸ் உள்ளிட்டோரின் படங்களும் இடம் பெற்றிருந்தன. உள்நாட்டு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு பிரபலங்களில் படமும் இதில் இடம் பெற்றுள்ளது மிகுந்த கவனம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர்களை ’சனாதன் ரக்ஷா சங்கதன்’ என்ற அமைப்பு ஒட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, மேற்குறிப்பிட்டவர்கள் இந்தியாவின் நலனுக்கு எதிரானவர்கள் எனக் குறிக்கும் வகையில் இந்த போஸ்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
