ஆளும்கட்சியில் அடைக்கலம் ஆகும் சமூக விரோதிகள்; அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவையில் அவர் அளித்த பேட்டி;

விஜய் வந்தார், அவரை பார்த்தேன், கத்தினேன், கை கொடுத்தேன் என்று உங்களுக்கு (தவெக ஆதரவாளர்களை குறிப்பிடுகிறார்) என்ன சந்தோஷமோ அதை செய்யுங்கள்.விஜய்யை தப்பாக பேசியவர்களிடம் இன்ஸ்டாகிராமில் சண்டை போட்டேன் என்று சொல்பவர்களுக்கு அதனால் எந்த பயனும் இல்லை. அவரவர் அவரவரின் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு வாழ்கின்றனர்.

நீங்கள் போய் ஒருவருக்காக சுட்டெரிக்கும் வெயிலில் நிற்பதோ, சண்டை போட்டு கத்தி எடுத்து, சிவகங்கையில் நடந்தது மாதிரி, மிக மோசமாக இன்றைக்கு சமூக வலைதளம் மாறி இருக்கிறது. இதனால் உங்களுக்கு என்ன லாபம் என்று எனக்கு தெரியவில்லை. அரசியல் மாற வேண்டும். சமூக வலை தளத்தில் ஒருவருக்கு ஆதரவு தெரிவித்து உங்கள் வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்.

தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற மாற்றத்திற்காக நாங்கள் வந்திருக்கிறோம். எங்கள் பாதையில் தெளிவாக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறோம்.

ஆளும்கட்சியாக யார் வருகிறார்களோ அங்கே சென்று சமூக விரோதிகள் அடைக்கலம் ஆகின்றனர். ஆளும்கட்சி நபர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டால் போலீசார் நடடிவக்கை எடுக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றனர். ஆளும்கட்சியை சமூக விரோதிகள் ஒரு கேடயமாக பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு அண்ணாமலை பேட்டியளித்தார்.

Source link