அயலியைப் பின்தொடரும் போலீஸ்; மகேஷை தடுத்த ரேவதி: திருமணம் திட்டமிட்டபடி நடக்குமா?

அயலியைப் பின்தொடரும் போலீஸ்… இந்திராணியின் அடுத்த அதிரடி பிளான் – அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

அயலி சீரியலின் நேற்றைய எபிசோடில் அயலி ஆட்டோவில் கிளம்பிச் செல்ல, அவளுக்கே தெரியாமல் செல்லம் பின்னாடியே செல்கிறாள். இன்னொரு பக்கம், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் அனுப்பிய ஆளும் அயலியைத் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். 

தொடர்ந்து இன்றைய எபிசோடில், சிவாவுடன் போனில் பேசிக்கொண்டே நேராக ஒரு ஸ்டேஷனரி கடைக்குச் செல்லும் அயலி, அங்கே சார்ட் பேப்பர் உள்ளிட்ட சில பொருட்களை வாங்குகிறாள். இதையெல்லாம் பார்க்கும் செல்லத்துக்கு, அயலி எதற்காக இந்தப் பொருட்களை வாங்குகிறாள் என்று புரியாமல் குழப்பம் ஏற்படுகிறது. பொருட்களை வாங்கியதும் அயலி மீண்டும் ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்புகிறாள்.

வீட்டுக்கு வந்ததும் ஹாலில் இருந்தவர்கள், அவள் கையில் வைத்திருந்த பொருட்களைப் பார்த்து என்னவென்று விசாரிக்கிறார்கள். அதற்கு அயலி, சிவாவின் பள்ளியில் நடக்கப்போகும் கலை நிகழ்ச்சிக்காகத் தேவையான பொருட்கள்தான் இவை என்று சொல்லிச் சமாளிக்கிறாள். அவள் சொல்வதை மற்றவர்கள் நம்பிவிடுகிறார்கள். ஆனால், ரித்திகாவுக்கு மட்டும் அயலி மீது சந்தேகம் அதிகமாகிறது. 

இதற்கிடையில், விஜயகுமாருக்கு போன் செய்யும் அவனுடைய ஆள், அயலி ஸ்டேஷனரி கடையில் சில பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிய விவரத்தைச் சொல்கிறான். இந்திராணி கபிலனைத் தொடர்புகொண்டு, “இன்னைக்கு ஒரு முக்கியமான பிரேக்கிங் நியூஸ் போடப்போறேன்” என்று சொல்கிறாள். அது என்ன நியூஸ் என்று கபிலன் கேட்க, “இன்னைக்கு மாலை 7 மணிக்கு எல்லாருக்கும் தெரியவரும். அப்போ நீயும் தெரிஞ்சுக்கோ!” என்று சொல்லி சஸ்பென்ஸை அதிகப்படுத்துகிறாள் இந்திராணி.

மறுபக்கம், வீட்டில் ஏதோ ரகசியமாக நடப்பதை உணரும் ரித்திகா, உடனே மோனிகாவுக்குப் போன் செய்து நடந்த விஷயங்களைச் சொல்கிறாள். அதைக் கேட்ட மோனிகா, “நீ அங்கேயே இருந்து என்ன நடக்குதுன்னு கவனிச்சு, உண்மையைக் கண்டுபிடி” என்று சொல்கிறாள். இதனால், அயலியின் அறையில் என்ன ரகசியம் ஒளிந்திருக்கிறது என்பதை எப்படியாவது கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று ரித்திகாவும் சதித்திட்டம் தீட்டுகிறாள். இதனால் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மகேஷின் சதித் திட்டத்திலிருந்து தப்பிய ஸ்வாதி… ரேவதிக்காகக் காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!

கார்த்திகை தீபம் சீரியலில், அடுத்தடுத்து நடக்கப்போகும் அதிரடி திருப்பங்கள் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளன. ஸ்வாதியிடம் தவறாக நடக்க முயன்ற மகேஷ்… மாயாவின் மிரட்டல்!

கடந்த எபிசோடில், அத்தையின் பேச்சைக் கேட்டு மாறுவேடத்தில் இருக்கும் மகேஷ், ஸ்வாதியின் பாலில் மயக்க மாத்திரையைக் கலந்து கொடுத்து, அவளைத் தனி அறையில் அடைத்து மயக்கத்தில் இருக்கும் ஸ்வாதியிடம் தவறாக நடந்துகொண்டு, வேறு வழியில்லாமல் அவளையே திருமணம் செய்ய வைத்துவிடலாம் என்று திட்டம் போடுகிறான் ஆனால், ஸ்வாதியை நெருங்கும்போது அவனுக்குப் பயம் வந்துவிடுகிறது. 

அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அறையை விட்டு வெளியே வரும் மகேஷ், நடந்த விஷயத்தைத் தனது அண்ணி மாயாவிடம் சொல்கிறான். இதைக் கேட்டு கோபமடையும் மாயா, அவனைத் திட்டி தைரியம் சொல்லி மீண்டும் அறைக்குள் அனுப்பி வைக்கிறாள். அதுமட்டுமில்லாமல், யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவளே வெளியே நின்று கண்காணிக்கவும் செய்கிறாள்.

மண்டபத்தில் ஸ்வாதியைக் காணாமல் தேடிக்கொண்டிருக்கும் ரேவதிக்கு, அவள் எங்கே போனாள் என்ற சந்தேகம் எழுகிறது. அப்போது மண்டபத்தின் மேல்மாடியில் கூடுதலாக ஒரு அறை இருப்பதாக மேனேஜர் சொல்ல, உடனே அங்கே செல்கிறாள் ரேவதி. அங்கு மகேஷ் நிற்பதைப் பார்த்ததும், ஏதோ தவறு நடக்கப்போகிறது என்பதைப் புரிந்துகொண்டு அவனைத் தடுத்து நிறுத்துகிறாள். இதனால், ஸ்வாதிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதற்கு முன்பே அவளைப் பத்திரமாக மீட்டு அழைத்து வருகிறாள் ரேவதி. நடந்த விஷயத்தை கார்த்திக்கிடம் சொல்லி ரேவதி குழப்பத்தில் இருக்க, மறுபக்கம் மாயாவுக்கு ஒரு புதிய சந்தேகம் வருகிறது.

ரேவதிக்கு தங்களுடைய சதித் திட்டம் தெரிந்துவிட்டதா என்று யோசிக்கத் தொடங்குகிறாள். இதற்கிடையில், திருமணத்துக்குத் தேவையான கூறைப்புடவையை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டதாக ரோஹினியிடம் சொல்கிறாள் ஸ்வாதி. இதைக் கேட்ட ரேவதி, தானே வீட்டுக்குச் சென்று புடவையை எடுத்துவருவதாகக் கிளம்புகிறாள். அப்போது சந்திரகலா அவளைத் தடுத்து, இப்போது வீட்டுக்குப் போக வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால், நாளை காலை வரை காத்திருக்க முடியாது என்று கூறும் ரேவதி, உடனே வீட்டுக்குக் கிளம்பிவிடுகிறாள்.

ரேவதி வீட்டுக்குச் செல்வதைப் பார்த்த சந்திரகலா பதற்றமடைகிறார். உடனே சிவானந்திக்குப் போன் செய்து, சதீஷை அடைத்து வைத்திருக்கும் இடத்துக்கு ரேவதி வந்துகொண்டிருப்பதாக எச்சரிக்கிறார். வீட்டுக்குள் செல்லும் ரேவதி, கூறைப்புடவையைத் தேடிக்கொண்டிருக்கிறாள். அப்போது திடீரென அறையின் ஒரு மூலையிலிருந்து சொம்பு உருளும் சத்தம் கேட்கிறது. அந்தச் சத்தத்தைக் கேட்ட ரேவதி, அங்கே என்ன இருக்கிறது என்று பார்க்கச் செல்கிறாள்.

அங்கே சதீஷ் இருப்பது ரேவதிக்குத் தெரியவருமா? சிவனாண்டியின் சதித் திட்டம் அம்பலமாகுமா? ரேவதியிடம் சதீஷ் சிக்கிக்கொள்வானா? ஸ்வாதியைக் காப்பாற்றிய ரேவதிக்கு அடுத்ததாக என்ன அதிர்ச்சி காத்திருக்கிறது? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source link