இடைத்தேர்தல் களத்தை கணித்த தவெக: அம்பாசமுத்திரத்தில் சீமான் – அதகளப்படுத்த தயாரான திமுக – seeman as a common candidate in ambasamudram by election – opposition parties try to pull down tvk victory

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் ஆளும் தவெக அரசை எதிர்க்க பொதுவேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை முன்னிறுத்த திமுக முயன்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதன் தொடர்ச்சியாகவே தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகா திடீரென கைது செய்யப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் தவெக கட்சி உருவெடுத்து ஆட்சியையும் பிடித்து விட்டது. இதனால் இதுவரை இருமுனை போட்டியாகவே இருந்த நிலை மாறி தற்போது மும்முனை போட்டியாக இருக்கிறது.

வாக்குகளும் மூன்றாக பிரிந்து கிடக்கிறது. அன்மையில் நடந்துமுடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவில் அதன் தாக்கம் எதிரொலித்தன. தவெகவை விட திமுக, அதிமுக வாக்குகள் அதிகம் பெற்று இருந்தும் தனித்தனியாக களம் கண்டதால் தவெக வெற்றிப் பெற்றதாக அரசியல் விமர்சகர்கள் கூறினர்.

இடைத்தேர்தல் களத்தை கணித்து வியூகம் வகுக்கும் தவெக

இடைத்தேர்தல் முடிவுகளை தொடர்ந்து அடுத்து வர உள்ள 5 சட்டமன்ற தொகுதிகள் குறித்து இப்போதே அரசியல் கட்சிகள் கணிக்க தொடங்கி விட்டதாக அரசியல் வல்லுநகர்கள் கூறுகின்றனர். ஆனால் தவெக வெற்றியை தடுக்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாக உள்ளன. இதனை அறிந்த தவெக அரசு சமூகவலைதளங்களில் அதிக களமாடும் நாம் தமிழர் கட்சியினரை காவல்துறை உதவியுடன் கைது செய்து வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கார்த்திகா கைதும் – எதிர்க்கட்சியினரின் கண்டன கனைகளும்

தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இடைத்தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் விஜயை விமர்சித்ததால் இன்று(அக்.20) அதிகாலை கார்த்திகாவை கைது செய்த போலீசார், காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்கின்றனர்.

எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்த திட்டமா ?

அடுத்துவரவுள்ள 5 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதை அறிந்த தவெக அரசு, நாதகவினரை அச்சுறுத்தும் நோக்கில் இது போன்ற கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளதா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒருவேலை 5 தொகுதி இடைத்தேர்தலிலும் தவெக வெற்றி பெற்றால் தனிப்பெரும்பான்மையை பிடிக்க இதுபோன்ற இடைத்தேர்தலை அடுத்த 5 ஆண்டுகள் தொடர்ந்து நடத்த தவெக அரசு திட்டம் தீட்டும் எனவும் அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

நாதகவின் எம்எல்ஏ கணக்கை தொடங்கி வைப்பாரா சீமான் ?

தவெகவின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை உயர்வை தடுக்க எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அம்மபாசமுத்திரத்தில் நாம் தமிழ்ர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நிறுத்த வியூகம் வகுக்கப்பட்டு வருவதாகவும், இதே போன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ள மற்ற நான்கு தொகுதியிலும் பொதுவேட்பாளரை களம் இறக்க எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் விஜயின் தேர்தல் வியூகத்தை உடைத்து இடைத்தேர்தலில் சீமான் வென்று நாம் தமிழர் கட்சியின் எம்எல்ஏ கணக்கை தொடங்கி வைப்பார என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Source link