‘நவம்பர் 1 முதல் 50% பேருக்கு வீட்டில் இருந்தே பணி’ – வெளியான அதிரடி அறிவிப்பு!

தற்காலத்தில் பல்வேறு காரணங்களால் நிலம், நீர், காற்று ஆகிய இயற்கை வளங்கள் தொடர்ந்து மாசடைந்து வருவதாக உலகளவிலான சுற்று சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இது உலகளாவிய பிரச்சனை என்பதால் அனைத்து நாடுகளும் இந்த மாசு கட்டுப்பாட்டை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் இத்தகைய மாசடைதல் பிரச்சனைகளால் பல்வேறு நகரங்கள் வாழாத் தகுதியற்ற இடங்களாக மாறிவருவதாகவும் கூறப்படுகிறது.  

குறிப்பாக தலைநகர் டெல்லியில் கற்று மாசு என்பது அம்மக்களுக்கு மிக நீண்ட காலமாகவே பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. இந்த காற்று மாசுபாட்டால், குழந்தைகளின் சுகாதார நலனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காற்று மாசுப்பாட்டை தவிர்க்க டெல்லி அரசு பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. அதன் படி நிலக்கரி மற்றும் விறகு சார்ந்து எரியூட்டும் அடுப்புக்களை தடை செய்துள்ளது. திறந்த வெளியில் குப்பை அல்லது வேறு ஏதேனும் எரிக்கவும் டெல்லி மாசு கட்டுப்பட்டு குழுமம் தடை விதித்துள்ளது.

கடந்தாண்டு காற்று மாசை குறைக்கும் டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில், வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் 50 சதவீதம் பேருக்கு வீட்டிலிருந்தே பணி செய்ய டெல்லி பா.ஜ.க அரசு அறிவித்துள்ளார். தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் காற்று மாசு ஏற்படும் அச்சம் இருக்கிறது. அதனால் காற்று மாசை குறைப்பதற்காக டெல்லி முதல்வர் ரேகா குப்தா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்.

அந்த வகையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை சுமார் மூன்று மாதங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசாங்கம் விதித்துள்ளது. அதன்படி, 50 சதவீத பேருக்கு வீட்டில் இருந்தே பணி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், BS6 வாகனங்களுக்கு மட்டுமே குளிர்காலத்தில் அனுமதிக்கப்படும் என்றும், காற்று மாசு தரச்சான்று இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு எரிவாயு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.