மீண்டும் நிர்வாகிகள் கூட்டம்; அரசியலில் தீவிரம் காட்டும் நடிகர் தனுஷ்?

முதல்வர் விஜய்யை தொடர்ந்து தமிழ் சினிமா நடிகர்கள் அரசியலில் களமிறங்க தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் தனுஷ் அரசியலில் களம் இறங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தனுஷின் செயல்பாடுகளும் அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும் அமைந்து வருகிறது. முதலில் அவரது கட்சிக் கொடி என ஒரு கொடி சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் அது நற்பணி மன்ற கொடி என்று தனுஷ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதனிடையே தனது நற்பணி மன்ற நிர்வாகிகள் சந்திப்பை பிரம்மாண்டமாக நடத்தினார். அதில் நமது கூட்டத்துக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்று பேசியிருந்தார். பின்பு தனது பிறந்தநாளில் போயஸ் கார்டன் வீட்டில் ரசிகர்களைச் சந்தித்தார். தொடர்ந்து நற்பணி மன்றத்தைத் தொகுதி வாரியாக வலுப்படுத்த அறிவுறுத்தியிருந்தார். இப்படி தனுஷின் செயல்பாடுகள் அவரது அரசியல் வருகைக்கான நடவடிக்கையாகவே பார்க்கப்படும் சூழலில், தனுஷ் ரசிகர் மன்றத்தை தனுஷ் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டது.

கோவையில் கடந்த 14ஆம் தேதி நடந்த தனுஷ் ரசிகர் நற்பணி மன்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், இதுவரை செயல்பட்டு வந்த தனுஷ் ரசிகர் மன்றங்கள், இனிமேல் தனுஷ் நற்பணி இயக்கமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக வரும் 25ஆம் தேதி மீண்டும் நிர்வாகிகளை தனுஷ் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வரும் 25ஆம் தேதி நற்பணி மன்ற நிர்வாகிகள் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அந்த கூட்டத்தில் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நேற்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அவர் நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.