ரூ.2 லட்சம் கோடியை கடந்த மார்ச் மாத ஜி.எஸ்.டி., வசூல்

புதுடில்லி: கடந்த மார்ச் மாதம், நாட்டின் மொத்த ஜி.எஸ். டி., வசூல் 8.80 சதவீதம் உயர்ந்து இரண்டு லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக, நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு மார்ச்சில் 1.84 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து கிடைக்கும் வருவாய் அதிகரிப்பு, உள்நாட்டு பரிவர்த்தனைகள் உயர்வு ஆகிய இரண்டும் இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. கடந்த நிதியாண்டில் மூன்றாவது அதிகபட்ச மாதாந்திர வசூல் இதுவாகும்.

இதற்கு முன் கடந்தாண்டு ஏப்., மாதம் 2.36 லட்சம் கோடி ரூபாயும்; மே மாதம் 2.01 லட்சம் கோடி ரூபாயும் வசூல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம், உள்நாட்டு வரி வருவாய் 5.90 சதவீதம் அதிகரித்து 1.46 லட்சம் கோடி ரூபாயாகவும்; இறக்குமதி வரி வருவாய் 17.80 சதவீதம் உயர்ந்து 53,861 கோடி ரூபாயாகவும் இருந்தது. மொத்தம் 22,074 கோடி ரூபாய்க்கு ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த மாதத்துக்கான ஜி.எஸ்.டி., வசூல் இரண்டு சதவீதம் அதிகரித்து 6,882 கோடி ரூபாயாக உள்ளது.

Source link