பாகிஸ்தானில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இதில், முதல் லீக் போட்டியில், இலங்கைக்கு எதிராக, பாகிஸ்தான் அணி, 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இரண்டாவது போட்டியில், பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதி வருகின்றன.
இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பாகிஸ்தான் இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், டாப் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. ஓபனர், பக்கர் ஜமான் கோல்டன் டக் ஆகி ஷாக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, சைய் அயுப்பும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. 6 பந்தில் 8 ரன்னை மட்டும் சேர்த்து அவுட் ஆனப் பிறகு, அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் பாபர் அசாம், சாத் பேய்க் ஆகியோர் ஈடுபட்டனர்.
ஆனால், இருவரும் ஓரளவுக்கு நல்ல ரன்களை அடித்துவிட்டு அவுட் ஆனார்கள். பாபர் அசாம், 52 பந்தில் 34 ரன்களை சேர்த்து அவுட் ஆன நிலையில், சாத் பேய்க் 54 பந்தில் 35 ரன்களை எடுத்து நடையைக் கட்டினார். பிறகு, சல்மான் அகாவும் 19 பந்தில் 16 ரன்களைதான் எடுத்தார்.
இப்படி, முதல் 5 பேட்டர்களும் சொதப்பியப் பிறகு, ஹசன் நவாஸ் மற்றும் அராபட் மின்ஹாஸ் இருவரும் அபாரமாக விளையாடி, பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். நவாஸ் 74 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 79 ரன்களை சேர்த்த நிலையில், அராபட் மின்ஹாஸ் 58 பந்தில் 59 ரன்களை சேர்த்தார்.
பிறகு, இறுதிக் கட்டத்தில், பஹீம் அஷ்ரப் 26 பந்தில் 39 ரன்களை, அதிரடியாக சேர்த்த நிலையில், கேப்ட்ன ஷஹீன் அப்ரீதி, 5 பந்தில் 10 ரன்களை எடுத்தார். இதனால், பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 302/9 ரன்களை எடுத்தது.
இங்கிலாந்து அணியில், கஸ் அட்கின்சன் சிறப்பாக பந்துவீசி, 7 ஓவர்களில் 35 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார். சோனி பேக்கர் 9 ஓவர்களில் 65 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை சாய்த்தார்.
இப்போட்டியிலும், பாகிஸ்தான் அணி வெற்றியைப் பெற்றால், பைனலுக்கு முன்னேற வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இதனால், இப்போட்டியில் எப்படியாவது வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி இருக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு, இத்தொடர் மிகமுக்கியமானதாக இருக்கிறது. ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடருக்கு பிறகு, இங்கிலாந்து அணி, 8 ஒருநாள் தொடர்களில் விளையாடி, அதில் 4 ஒருநாள் தொடர்களில் மட்டுமே வென்றதுள்ளது. சமீபத்தில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியிருந்தது.
அதே பார்மை தற்போது, இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் வெளிப்படுத்தி, கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி இருக்கிறது.
அதேபோல், பாகிஸ்தான் அணி, தனது சொந்த மண்ணில் விளையாடுவதால், அந்த அணியும் கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இலங்கை அணியும், முழு பார்மை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இந்த முத்தரப்பு தொடர், பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
