தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நடிகையான அனுபமா பரமேஸ்வரன், சமீபத்தில் தனது காதல் விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசியிருந்தார். அதில், தான் ஒரு நடிகரைக் காதலித்ததாகவும் இருப்பினும், அந்த உறவு தனக்கு மிகவும் மோசமான அனுபவத்தைத் தந்ததாகவும் வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதோடு, அவர் தான் காதலித்த நபரின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், அது ’பைசன்’ பட நடிகர் தான் என்று பலரும் கூறிவந்தனர். இதனிடையே, அனுபமா குறித்து பலரும் பல்வேறு விதமான அவதூறான விமர்சனங்களை முன் வைத்து வந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனுபமா, தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், ”ஒரு திரைப்படம் நன்றாக இல்லையென்றால் விமர்சனங்கள் வருவது முக்கியமானதுதான். ஆனால், அது ஆரோக்கியமானதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு, பணம் பெற்றுக்கொண்டு தவறாக விமர்சிப்பவர்களுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?
சமூக வலைத்தளங்களில் வரும் அனைத்து விமர்சனங்களுக்கும் என்னால் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அதற்குத் திமிர் என்று பொருள் இல்லை. எனக்குப் பிடித்த பதிவுகளுக்கு நான் பதிலளிப்பேன்.
எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தாலும் வேறு வேலை இல்லையா? என்கிறார்கள். எனக்கு இதுபோன்ற அணுகுமுறைகளில் விருப்பம் இல்லை. எனக்கு ஓய்வு இருந்தாலும் அது இல்லாதது போல் நான் ஏன் நடிக்க வேண்டும்?” என்று குறிப்பிட்டிருந்தார். அனுபமாவின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
