ரஞ்சிக் கோப்பை தொடரில் 1940, 1941 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக கோப்பை வென்ற மகாராஷ்டிரா அணி, தற்போது 2026ஆம் ஆண்டு சீசனில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடி வருகிறது.
இதில், முதலில் களமிறங்கிய ஜார்கண்ட் அணி, முதல் இன்னிங்ஸில் 169/10 ரன்களை அடித்த நிலையில், அடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடி வரும் மகாராஷ்டிரா அணி 500 ரன்களுக்கு மேல் குவித்து, வலுவான நிலையில் இருக்கிறது.
ருதுராஜ் அபாரம்: குறிப்பாக, மகாராஷ்டிரா அணிக்காக, 7ஆவது இடத்தில் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட், 172 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 101 ரன்களை குவித்து களத்தில் இருக்கிறார். இவருடன், அன்கிட் பௌன் 358 பந்துகளில் 13 பவுண்டரி உட்பட 169 ரன்களை குவித்து களத்தில் இருந்தார். அப்போது, டிக்ளேர் அறிவிக்கப்பட்டது.
ஸ்கோர் விபரம்: முதலில் களமிறங்கிய ஜார்கண்ட் அணியில், எந்த பேட்டரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஓபனர் ஷிகர் மோகன் 27 (50), உட்காஷ் சிங் 27 (83), ராபின் மின்ஸ் 38 (44), மனிஷி 35 (50) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு ரன்களை அடித்தனர். மற்ற பேட்டர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, கேப்டன் விராட் சிங் கோல்டன் டக் ஆகி ஷாக் கொடுத்தனர். இறுதியில், ஜார்காண்ட் அணி, முதல் இன்னிங்ஸில் 169/10 ரன்களை மட்டுமே எடுத்தது.
மகாராஷ்டிரா அணி பௌலர் விக்கி ஓட்ஸ்வால் 15 ஓவர்களில் 39 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். பிரதீப் தாதே மற்றும் டனய் சங்வி ஆகியோர் தலா 3 விக்கெட்களை எடுத்தார்கள்.
மகாராஷ்டிரா இன்னிங்ஸ்: அடுத்து, முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய மகாராஷ்டிரா அணியில், பேட்டர்கள் ரன் மழை பொழிந்தனர். ஓபனர் சச்சின் தாஸ் 89 பந்தில் 58 ரன்களை அடித்த நிலையில், ஒன்டவுன் பேட்டர் திக்விஜய் பாடீல் 244 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 148 ரன்களை குவித்து அசத்தினார். அடுத்து, அன்கிட் பௌன் 169 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 101 ரன்களையும் எடுத்தபோது, மகாராஷ்டிரா அணி, 527/5 ரன்களை அடித்து, டிக்ளேர் அறிவித்தது.
கேப்டன் பிரித்வி ஷா 6ஆவது இடத்தில் ஆடி, 25 பந்தில் 21 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
ஜார்கண்ட் அணி போராட்டம்: 358 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி வரும் ஜார்கண்ட் அணி, தோல்வியை தவிர்க்க தீவிரமாக போராடி வருகிறது. ஓபனர், சரண்தீப் சிங் 6 (31) விரைவிலேயே அவுட் ஆன நிலையில், ஷிகர் மோகன் 74 (140), உட்கர்ஷ் சிங் 45 (111) ஆகியோர் தற்போது களத்தில் இருக்கிறார்கள். ஜார்கண்ட் அணி, 130/1 ரன்களை எடுத்து, 228 ரன்கள் பின்தங்கியிருக்கும் நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
ஒருவேளை, ஜார்கண்ட் அணி, நான்காவது நாள் ஆட்டம் முழுவதும் நிலைத்து நின்று விளையாடிவிட்டால், ஆட்டம் டிரா ஆகிவிடும். இதனால், நான்காவது நாள் ஆட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
