தமிழகத்தில், அதிலும் குறிப்பாக அரசியல் தளத்தில், ஜோதிடம் குறித்த நம்பிக்கைகளும் ஜோதிடர்கள் அளிக்கும் கணிப்புகளும் பலித்து வருவதாகப் பேச்சுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. தமிழக முதல்வர் விஜய்யே தனக்கு ஆஸ்தான ஜோதிடராக ரிக்கி ரத்தன் பண்டிட்டை வைத்திருக்கிறார். மேலும், அவரைத் தனது சிறப்புப் பிரிவு அதிகாரியாக மாற்ற முயற்சி செய்து, பின்னர் அந்த முயற்சியிலிருந்து பின்வாங்கிய கதை எனப் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். இந்தச் சூழலில்தான், கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு முன்பு அனிருத் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அவர் யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று ஒரு ஜோதிடர் கணித்தது தற்போது உண்மையாகியுள்ளதாகப் பேசப்படுகிறது. அதே ஜோதிடர் தற்போது விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்தும் கணித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
முதல்வர் விஜய்யும் ஜோதிடமும்
முதல்வர் விஜய்க்கு ஜோதிடத்தில் அதிகளவு நம்பிக்கை உண்டு என்பது குறித்த தகவல்கள் சமீபகாலமாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அவர் 2024-ல் கட்சி தொடங்கியதிலிருந்து, அவரது அனைத்து நடவடிக்கைகளும் ஜோதிடரின் ஆலோசனைப்படியே நடைபெற்றதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
அனிருத் திருமணம்: முன்கூட்டியே கணித்த ஜெயஸ்ரீ?
பல ஆண்டுகளுக்கு முன்பு, நட்புடன் அப்சரா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிருத்தைச் சந்தித்த ஜோதிடர் ஜெயஸ்ரீ, டாரோ கார்டு முறையைப் பயன்படுத்தி சில கணிப்புகளைத் தெரிவித்திருந்தார்.
அனிருத் சென்னையைச் சேர்ந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வார் என்றும், தனது தந்தையின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்வார் என்றும், அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணின் வீடு அனிருத்தின் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என்றும் அவர் கணித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கணிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து ஜெயஸ்ரீயின் கணிப்பு
இந்தச் சூழலில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நேர்காணலில் முதல்வர் விஜய்யின் அரசியல் பயணம் மற்றும் எதிர்காலம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ஜெயஸ்ரீ, முதல்வர் விஜய் தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக நிறைய செய்ய வேண்டும் என்று நினைப்பதாகக் கூறினார். ஆனால், அதற்குப் பல தடைகள் வரும் என்றும், ஒவ்வொன்றாகத்தான் அவற்றைச் செய்து முடிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மேல்மட்ட அளவில், அதாவது அமைச்சர்கள் அளவில், அவர் சீரமைப்புகளை மேற்கொண்டுவிட்டதாகவும், ஆனால் இன்னும் அடிமட்ட அளவில் சீரமைப்புகளை மேற்கொள்ளவில்லை என்றும் கூறினார். அந்த மாற்றங்களையும் அவர் செய்தே ஆக வேண்டும் என்றும் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.
தொடர்ந்து, விஜய் இன்னும் எத்தனை ஆண்டுகள் முதலமைச்சர் பதவியில் நீடிப்பார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், விஜய் 20 ஆண்டுகள் முதலமைச்சராக இருப்பார் என்றும், அவர் பிரதமராவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் தெரிவித்தார்.
தனுஷின் அரசியல் வருகை: பாதியிலேயே நின்றுவிடுவாரா?
மேலும், தனுஷின் அரசியல் பயணம் குறித்துப் பேசிய ஜெயஸ்ரீ, டாரோ கார்டுகளை எடுத்துப் பார்த்துவிட்டு, தனுஷ் அரசியலுக்கு வந்தால் பாதி தூரம் வந்துவிட்டு நின்றுவிடுவார் என்று கணித்தார்.
2029-ல் பிரதமராக முயற்சிக்கும் முதல்வர் விஜய்! தவெக Plan சாத்தியமா?
அவரால் அரசியல் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது மிகவும் கடினம் என்றும், அவருக்கு ஆதரவாக யாரும் வரமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபகாலமாக அரசியலில் ஜோதிடர்களின் கணிப்புகள் கவனம் பெற்று வரும் சூழலில், தனுஷ் குறித்து பிரபல ஜோதிடர் ஜெயஸ்ரீ எதிர்மறையான கருத்துகளைப் பேசியிருப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
