இந்த விமானம் முன்னதாக, தற்போது செயல்படாத நிலையில் உள்ள ‘Fly Big’ என்ற விமான நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தது; பின்னர், தேவையான மாற்றங்கள் மற்றும் சான்றிதழ் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு, இந்தியாவில் நீர்விமானச் சேவைக்காகப் பயன்படுத்தும் வகையில் இது மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு டர்போபிராப் விமானம், மிதவைகள்( (floats) பொருத்தப்பட்டு நீரில் இயங்கும் விமானமாக மாற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த சோதனையை அவானி சிங் தலைமையிலான ஸ்கைஹாப் ஏவியேஷன் நிறுவனம் நடத்தியது.
இந்த சோதனை வெற்றியடைந்ததன் மூலம், இந்தியாவில் சுற்றுலாத் தலங்கள் மற்றும் அந்தமான், லட்சத்தீவு, தேரி ஏரி போன்ற தொலைத்தூர பகுதிகளுக்கு எளிதாக விமான போக்குவரத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடல் விமான சேவைகள் தீவுகளுக்கு இடையேயான பயண நேரத்தை கணிசமாகக் குறைத்து, அணுகலை மேம்படுத்தும்.
