கடந்த ஆறு வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை, இந்த வாரம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிலான வாராந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் மற் றும் நிப்டி கிட்டத்தட்ட 6 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
இது, கடந்த பிப்., 2021க்கு பின் பதிவான மிகச்சிறந்த வாராந்திர செயல்பாடாகும்.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 918 புள்ளிகள் உயர்ந்து, 77,550 புள்ளிகளிலும்; நிப்டி 275 புள்ளிகள் உயர்ந்து 24,050 புள்ளிகளிலும் நிறைவடைந்தன.
![]() |
முக்கிய காரணங்கள்
* வங்கி, நிதித்துறை சார்ந்த பங்குகளில் அதிக முதலீடு
* அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெற உள்ள பேச்சு, தற்காலிக போர் நிறுத்தம்
* கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவது
* அமெரிக்காவின் ‘எஸ் அண்டு பி 500’ குறியீடு 6,800 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது
* டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தது.
இதுகுறித்து சந்தை நிபுணர்கள் கூறியதாவது:
தற்போது சந்தைக்கு சாதகமான சூழல் உருவாகியிருந்தாலும், நிப்டி 23,930 புள்ளிகளுக்கு மேல் நிலைபெற்றால் விரைவில் 24,400 புள்ளிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இருப்பினும், ஈரான் பேச்சுவார்த்தையின் முடிவுகளே அடுத்த வார சந்தையின் திசையை தீர்மானிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

