Kulasai Dasara: குலசை தசரா விழா.. இறுதியாக சேவல் வடிவில் வந்த சூரனை.. சம்ஹாரம் செய்த முத்தாரம்மன்! குவிந்த பக்தர்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். உச்சமாக தன்முகமாக வந்த சூரனை முதலில் முத்தாரம்மன் வதம் செய்தார். தொடர்ந்து சிங்க முகத்துடனும், எருது முகத்துடனும் வந்த சூரனையும் முத்தாரம்மன் வதம் செய்தார். இறுதியாக சேவை வடிவில் கடும் போர் புரிந்த சூரனை சூலாயுதத்தால் முத்தாரம்மன் சம்ஹாரம் செய்தார்.

குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்திஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கர்நாடக மாநிலம், மைசூர் தசராவை குலசேகரன்பட்டினத்திலும் இந்த விழா, உலகளவில் பிரபலமான ஒன்று.

இந்த விழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, முருகன், அம்மன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து வருகிறார்கள்.

8ஆம் நாளான திங்கள்கிழமை காலை முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 10 மணிக்கு அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் முத்தாரம்மன் திருவீதியுலா நடந்தது.

இதையடுத்து விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு 12 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கடற்கரை வளாகத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் இந்த சூரசம்ஹாரம் நடைபெறும். அந்த வகையில் சூரசம்ஹாரத்தை காண்பதற்காக இம்முறை லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நள்ளிரவில் சூரசம்ஹாரம் களைகட்டிய நிலையில், நள்ளிரவு 12.10 மணிக்கு முதலில் தன்முகமாக வந்த மகிஷாசுரனை சிம்மன் வாகனத்தில் வந்த முத்தாரம்மன் வதம் செய்தார்.

அப்போது குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் காளி, ஜெய் காளி என்று கோஷமிட்டனர். தொடர்ந்து சிங்க முகத்துடன் வந்த சூரனையும் முத்தாரம்மன் வதர்ம் செய்தார். இதன்பின் எருது முகத்துடன் வந்த சூரனையும் வதம் செய்தார். 3வதாக எருது முகத்துடன் வந்த சூரனையும் வதம் செய்தார் முத்தாரம்மன். இறுதியாக சேவல் வடிவில் கடும் போர் புரிந்த சூரனை, சூலாயுதத்தால் முத்தாரம்மன் வதம் செய்தார்.

சூரசம்ஹாரம் நிறைவடைந்த பின் முத்தாரம்மனுக்கு சாந்தாபிஷேகம் நடைபெற்றது, ஆராதணைகள் காட்டப்பட்டன. சூரசம்ஹாரம் முடிந்ததும் புதன்கிழமை 1 மணிக்கு, கடற்கரை மேடையில் அம்மன் எழுந்தருள்வார். அவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அதிகாலை 3 மணிக்கு அம்மன் திருத்தேர் பவனி வரும் நிகழ்வும் நடைபெறும். பின்னர் 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா புறப்பட்டு மாலை 4 மணி அளவில் கோயிலுக்கு வருவார்.

இதையடுத்து 4.30 மணிக்கு மேல் காப்பு களைதல், நள்ளிரவு 12 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் வியாழக்கிழமை அன்று மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது

சூரசம்ஹாரத்தையொட்டி நேற்று காலை முதலே தமிழகம் மட்டுமல்லாமல் மும்பை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குலசேகரபட்டினத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

சூரசம்ஹாரத்தையொட்டி கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிகர விழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் போலீஸார் பாதுகாப்புப் பணிகளை செய்துள்ளனர்.