சென்னை: வட தமிழகத்தில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர் என 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த 5 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மாவட்டங்களில் காலை 7 மணி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் – 12 செ.மீ
சைதாப்பேட்டை – 12 செ.மீ
நுங்கம்பாக்கம் – 10.7 செ.மீ
அடையாறு – 10 செ.மீ
தரணமி – 9.5 செ.மீ
பம்பன் – 5.5 செ.மீ
என மழை பதிவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
