காவல்துறை சமூகத்தின் பாதுகாப்பு அரண்; சொல்கிறார் ஸ்டாலின்

சென்னை: தேசிய போலீஸ் நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: காவல்துறை சட்டத்தை நிலைநாட்டும் அமைப்பு மட்டுமல்ல; நமது சமூகத்தின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு அரண்.

காவலர்கள் ஆற்றும் கடமையையும் அவர்களது அளப்பரிய தியாகத்தையும் சிய போலீஸ் நினைவு தினத்தில் நன்றியோடு நினைவுகூர்வோம்.

மக்களின் பாதுகாப்புக்காகவும் அமைதியான வாழ்வுக்காகவும் ஆபத்துகளை எதிர்கொண்டு, அர்ப்பணிப்புணர்வோடு கடமையாற்றி இன்னுயிர் ஈந்த போலீசார் அனைவருக்கும் எனது வீரவணக்கம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Source link