காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி: முதல்வர் விஜயின் நெகிழ்ச்சியான செயல்? – police martyrs day cm vijays heartwarming gesture towards grieving mother

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது உயிரிழந்த 6 காவலர்களின் குடும்பங்கள் மற்றும் கோமா நிலையில் உள்ள ஒரு காவலரின் குடும்பம் என மொத்தம் 7 குடும்பங்களுக்கு ரூ.5.96 கோடி விபத்துக் காப்பீட்டுத் தொகையை முதல்வர் விஜய் வழங்கினார்.

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.96 கோடி மதிப்பிலான விபத்துக் காப்பீட்டுத் தொகையை முதல்வர் விஜய் வழங்கினார். அப்போது, உயிரிழந்த காவலரின் குடும்பத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தையுடன் வந்து கண்ணீர் வடித்த நிலையில், குழந்தையைத் தூக்கி ஆறுதல் கூறிய முதல்வர் விஜயின் செயல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

மலர்வளையம் வைத்து மரியாதை

சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்து கொண்டார். அப்போது, காவலர் நினைவுச் சின்னத்தின் முன்பாக மலர்வளையம் வைத்து உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

ரூ.5.96 கோடி காப்பீட்டுத் தொகை

சென்னையில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியின்போது டிஜிபி அலுவலகத்தில் முதல்வர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட பின் முதல்வர் விஜய், இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றியபோது உயிரிழந்த 6 காவலர்களின் குடும்பங்களுக்கும், கோமா நிலையில் உள்ள ஒரு காவலரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு சார்பில் விபத்துக் காப்பீட்டுத் தொகையை வழங்கினார். மொத்தம்7 காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 கோடியே 96 லட்சம் வழங்கப்பட்டது.

ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்

காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காகத் தனது குழந்தையுடன் வந்த தாய் ஒருவர், முதல்வர் விஜயைக் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் வடித்தார். இதையடுத்து, அந்தக் குழந்தையைத் தனது கையில் தூக்கிக்கொண்ட முதல்வர் விஜய், தாய்க்கு ஆறுதல் கூறினார்.இந்த நெகிழ்ச்சியான தருணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதல் முறையாக டிஜிபி அலுவலகத்திற்கு வருகை

முன்னதாக, டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநரின் (DGP) அறையை முதல்வர் விஜய் பார்வையிட்டார். தொடர்ந்து, அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு காவல்துறையின் தலைமை அலுவலகமான டிஜிபி அலுவலகத்திற்கு விஜய் வருகை தருவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

Source link