எழுதியவர்: கிருதி சோனாலி
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் சாதனை படைத்து வரும் நிலையில், 6-வது நாளில் படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான ‘ஜெயிலர் 2’, கடந்த அக்டோபர் 14-ந் தேதி வெளியானது. தற்போது படம் வெளியாகி 1 வாரம் இன்றுடன் (அக்டோபர் 21) நிறைவு செய்ய உள்ள நிலையில், இந்தியாவில் மொத்தமாக ரூ337 கோடியையும், நிகர வசூலாக ரூ287.80 கோடியையும் உலகளவில் ரூ541 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
இந்தியாவில் நேற்று (அக்டோபர் 20 – நாள் 6) அன்று, ‘ஜெயிலர் 2’ திரைப்படம் 15,529 திரையிடல்களில் இருந்து ரூ45.55 கோடிக்கும் மேல் ஈட்டியுள்ளது. இந்த வசூலில் பெரும்பாலான பகுதி அதன் தமிழ் பதிப்பில் இருந்தே கிடைத்துள்ளது. 7,828 காட்சிகளில் இருந்து ரூ31.20 கோடி. அதைத் தொடர்ந்து தெலுங்கு பதிப்பு (2,293 திரைகளில் இருந்து ரூ8.75 கோடி) மற்றும் ஹிந்தி பதிப்பு (5,230 திரைகளில் இருந்து ரூ5 கோடி) வசூலித்துள்ளன.
தசரா பண்டிகை விடுமுறையின் உதவியால், ‘ஜெயிலர் 2’ 6-வது நாளில் இந்தியாவில் தனது வசூலில் 7.6 சதவீத வளர்ச்சியைக் கண்டு, 15,529 காட்சிகளில் இருந்து ரூ45.55 கோடியைச் சேர்த்தது. சாக்னில்க் (Sacnilk) தகவலின்படி, ஜெயிலர் 2 திரைப்படம் 3-வது நாளில் ரூ47.25 கோடியாக இருந்த வசூல், 4-வது நாளில் ரூ55.85 கோடியாக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து 5-வது நாளில் ரூ42.35 கோடி வசூலித்திருந்தது.
தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக அதிக வசூல் செய்த முதல் வார இறுதி (4 நாட்கள்) படமாக ‘ஜெயிலர் 2’ உருவெடுத்துள்ளது; உலகளவில் ரூ418.25 கோடியை ஈட்டியுள்ளது. இது 2026-ஆம் ஆண்டில் இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் படமாகவும் அமைந்துள்ளது. மேலும், வியாழக்கிழமை அன்று வெளிநாடுகளில் ரூ57 கோடி வசூலித்து, இந்த ஆண்டில் அதிக வெளிநாட்டு தொடக்க வசூல் பெற்ற இந்திய படம் என்ற பெருமையையும் பெற்றது.
அதேபோல் ‘ஜெயிலர் 2’ உலகளவில் ரூ500 கோடி என்ற இலக்கை மிக வேகமாகக் கடந்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை இது படைத்துள்ளது. ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால சினிமா பயணத்தில், அவரது திரைப்பட வாழ்க்கையிலேயே மிகப்பெரிய தொடக்க வசூலைப் பதிவு செய்து உலகளாவிய வசூலில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது.
உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரூ500 கோடி மைல்கல்லைக் கடந்ததன் மூலம், எக்காலத்திலும் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் ஐந்தாவது இடத்தை ‘ஜெயிலர் 2’ பிடித்துள்ளது. இந்த டாப் 5 படங்களில் நான்கு ரஜினிகாந்தின் திரைப்படங்களாகும். ‘ஜெயிலர் 2’-வின் அடுத்த இலக்கு, கடந்த ஆண்டு வெளியாகி உலகளவில் ரூ518 கோடி வசூலித்த லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ திரைப்படமாகும்.
மூன்றாவது இடத்தில் 2023-இல் வெளியாகி உலகளவில் ரூ605 கோடி வசூலித்த ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாகம் உள்ளது. டாப் 5 பட்டியலில் ரஜினி படம் அல்லாத ஒரே படமான ‘தளபதி’ விஜய் நடித்த லோகேஷ் கனகராஜின் 2023 ஆக்ஷன் திரில்லர் ‘லியோ’ ரூ605.90 கோடியுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தை எஸ். ஷங்கரின் 2018-ல் வெளியான ‘2.0’ திரைப்படம் பிரம்மாண்டமான ரூ691 கோடியுடன் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
