திருப்பரங்குன்றம்: ''காங்., நிர்வாகிகள் அனைவரும் கனத்த இதயத் துடன்தான் இருக்கின்றனர்,'' என எம்.பி.,

திருப்பரங்குன்றம்: ”காங்., நிர்வாகிகள் அனைவரும் கனத்த இதயத் துடன்தான் இருக்கின்றனர்,” என எம்.பி., மாணிக்கம் தாகூர் பேசினார்.

மதுரை திருநகரில் நடந்த காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த 22 ஆண்டு கால காங்.,- தி.மு.க., கூட்டணியில் என்ன கிடைத்தது என்று கணக்கு பார்த்தால் சிக்கலாக தான் இருக்கும். கூட்டணிக்கு நம்மை அழைக்கவில்லை; நமக்கு மரியாதை இல்லை என்பதை 20 நாட்களுக்கு தள்ளி வைத்து விடுங்கள். நிர்வாகிகள் அனைவரும் கனத்த இதயத்துடன் இருக்கின்றனர் என்பது தெரியும்.

ஏப்., 23 மாலை 6:00 மணி வரை நம் பிரச்னைகளை தள்ளி வையுங்கள். நம் நோக்கம் பா.ஜ., – அ.தி.மு.க., திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறக் கூடாது என்பதுதான். கோட்சேவின் வாரிசுகள், அமித் ஷாவின் வளர்ப்புகள் பா.ஜ., வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.அ.ம.மு.க., – பா.ம.க.,வை சி.பி.ஐ., வருமான வரித்துறையைக் காட்டி மிரட்டி, அ.தி.மு.க., தலைமையில் கூட்டணிக்கு சேர்த்துக் கொண்டது பா.ஜ., இவ்வாறு பேசினார்.

Source link