சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஜார்கண்ட் மாநிலம் பாகூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பாய்குரி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22611) பாகூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும். அதே போல, நியூ ஜல்பாய்குரியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22612) இன்று முதல் பாகூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
